கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவைச் சேர்ந்த குரபரா ஹுண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது தசயநாயக்கா பண்ணை. இங்கு தக்காளி பெருமளவில் பயிரிடப்பட்டுள்ளதால் பாதுகாப்பிற்காகப் பண்ணையைச் சுற்றிலும் அதன் உரிமையாளர் மின்சார வேலி அமைத்துள்ளார்.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த மின்சார வேலி குறித்து அறியாத 16 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று பசி தாளாமல் தக்காளி தோட்டத்திற்குள் நுழைய முயன்றது.
அப்போது மின்சார வேலியில் இருந்து வெளியேறிய மின்சாரம் தாக்கி யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக வனத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.