கரோனா வைரஸ் நோய் எனும் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதே தீர்வு என பல நாடுகள் நம்பிவருகின்றன. பரிசோதனையைத் தொடர்ந்து, அவர்களின் பயண விவரங்களை சேகரித்து, தனிமைப்படுத்துவதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
நோயைக் கட்டுப்படுத்தி அரசுக்கு உதவும் நோக்கில் மருத்துவ உபகரணங்கள், செயலி ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துவருகின்றனர். ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படியான கண்டுபிடிப்பை பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு, மொபைல் சென்சார் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களின் மைக்ரோபோனை பயன்படுத்தி பயனாளர்களின் சுவாச கோளாறு பிரச்னையை கண்டறியும் அளவுக்கு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் மூச்சுவிடுவதை மைக்ரோ போன் மூலம் ஆராய்ந்து, கரோனா தொற்று பாதித்தால் அதனை கண்டறியும் அளவுக்கு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயனாளர்கள் எளிதாக பயன்படுத்துவதற்காக செயலியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் உருவாக்கத்தில் பேராசிரியர் வி கவு பெரிய பங்காற்றியுள்ளார்.
இதையும் படிங்க: ‘ஒரு நாடு ஒரே ரேசன் கார்டு’ திட்டத்தின் பயன்களும் சவால்களும்!