ETV Bharat / bharat

பரபரப்பான கட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியை சந்தித்த உள்துறை அமைச்சர் - அத்வானியை சந்தித்த உள்துறை அமைச்சர்

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அத்வானி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜூலை 24ஆம் தேதி ஆஜராக உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்து வழக்கு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்வானியை சந்தித்த உள்துறை அமைச்சர்
அத்வானியை சந்தித்த உள்துறை அமைச்சர்
author img

By

Published : Jul 22, 2020, 10:32 PM IST

உத்தரப் பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கர சேவகர்களால் (ஆர்எஸ்எஸ், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள்) 1992ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அச்சமயத்தில் அதனை முன்னிருந்து நடத்தியவர்கள் பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி என குற்றம்சாட்டப்பட்டது. மசூதி இடிக்கப்பட்டது குறித்த வழக்கின் விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

ஜூலை 24ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அத்வானி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை முன்வைக்கவுள்ளார். இப்பரபரப்பான சூழலில், அத்வானியின் வீட்டிற்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, வழக்கு குறித்து அவரிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பின்போது ராமர் கோயில் கட்டுமான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ள ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அத்வானியை அமித் ஷா அழைத்ததாகக் கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக முன்னாள் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் பங்கேற்கும் அடிக்கல் நாட்டு விழாவை நேரலையில் ஒளிபரப்ப அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 'நிதி நெருக்கடியில் தவிக்கும் வழக்குரைஞர்கள்'- உச்ச நீதிமன்றம் கவலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.