ETV Bharat / bharat

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்... மோடியை சந்திக்கிறார் சரத்பவார் - amidst-maha-deadlock-pawar-to-meet-pm-modi-today

டெல்லி: பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சந்திக்க இருக்கிறார்.

-pawar-to-meet-pm-modi-today
author img

By

Published : Nov 20, 2019, 10:26 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது. இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் சிவசேனா இறங்கியது. ஆனால் சிவசேனாவுக்கு இரண்டு கட்சிகளும் தங்களது ஆதரவை கொடுப்பதில் யோசனை காட்டிவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சந்திக்க இருக்கிறார். மகாராஷ்டிர மாநில விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக மோடியை சரத் பவார் சந்திக்கிறார் என கூறப்பட்டாலும், இந்த சந்திப்பு மகாராஷ்டிர மாநில அரசியலின் அடுத்தக்கட்ட நகர்வாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதுமட்டுமின்றி, சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவளிக்க யோசிப்பதற்கு பாஜக போட்ட முட்டுக்கட்டைதான் காரணம் என தகவல்கள் வெளியான சூழலில் மோடியுடனான சரத்பவாரின் சந்திப்பை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:

டெல்லி காற்று மாசு - டைட்டானிக் ஹீரோ கவலை!

Intro:Body:

MODI PAWAR

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.