ETV Bharat / bharat

கோவிட்-19 உதவி எண்ணை அழைத்தால் போதும் வீடுத்தேடி ஆம்புலன்ஸ் வரும் - அமைச்சர் மல்லாடிகிருஷ்ணன் ராவ்! - Ambulance will come to your house even if you call Covid-19 helpline number

புதுச்சேரி : கோவிட்-19 அவசர உதவி அழைப்பு மையத்திற்கு அழைத்தால்போதும், கரோனா பரிசோதனை செய்ய வீடு தேடி ஆம்புலன்ஸ் வரும் என்று, புதுச்சேரி சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 உதவி எண்ணை அழைத்தால் போதும் வீடுத்தேடி ஆம்புலன்ஸ் வரும் - அமைச்சர் மல்லாடிகிருஷ்ணன் ராவ்

author img

By

Published : Aug 5, 2020, 3:16 PM IST

Updated : Aug 5, 2020, 3:28 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிகிறது. இதன் காரணமாக, அங்கு இதுவரை 4 ஆயிரத்து 147 பேர் பாதிக்கப்பட்டும், 58 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது ஆயிரத்து 552 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பெற்று வருவதாகவும், 2 ஆயிரத்து 537 பேர் கோவிட்-19 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என, மாநகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு துறை சார்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுவருகிறது. இது தொடர்பாக இன்று (ஆக.5) ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்,"புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில், நேற்று(ஆக.4) காலை 10 மணியிலிருந்து இன்று காலை 10 மணி வரை ஆயிரத்து 24 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 286 பேருக்கு கரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை அடைந்ததுள்ளது. இதில் புதுச்சேரியில் 182 பேரும், காரைக்காலில் 21 பேரும், ஏனாம் பகுதியில் 80 பேரும், மாகே பகுதியில் 3 பேரும் என மொத்தம் இன்று மட்டும் புதிதாக புதுச்சேரியில் 286 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொது மக்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கரோன நோயாளிகளுக்கு சிகிச்சை ஒத்துழைப்பு அளிக்க கோரியுள்ளோம். அதற்கு 300 படுக்கைகள் தருவதாகவும் இன்னும் ஒருவாரத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 500 படுக்கைகள் அனுமதிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று முதல் புதுச்சேரியில் கரோனாவிற்காக 6 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த ஆம்புலன்ஸ்கள் புதுச்சேரி முழுவதும் சுற்றிக்கொண்டே இருக்கும். அவற்றில் மருத்துவர்‌, சுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் இருப்பர். அவரச உதவி மையத்தின் எண்ணிற்கு போன் செய்தால் போதும் அவர்கள் வீட்டில் வந்து மருத்துவ பரிசோதனை செய்து தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

Last Updated : Aug 5, 2020, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.