அண்மையில் மத்திய அரசு விவசாயம் தொடர்பாக மூன்று சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம். 2. விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 3, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் இந்தச் சட்டத்திற்கு தமிழ்நாடு திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், அதிமுக எம்பி ஓ.பி.ரவிந்திரநாத் குமார் வேளாண் மசோதாவை ஆதரித்து பேசியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து காரைக்கால் தனியார் திருமண மண்டபத்தில் புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சரும், திமுக மாநில அமைப்பாளருமான ஏ.எம்.ஹெச். நாஜிம் ஆகியோர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் வரும் 28ஆம் தேதி திமுக -காங் கூட்டணி கட்சிகளுடன் காரைக்கால் மாவட்ட விவசாயிகளையும் ஒன்றிணைத்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையனை வறுத்தெடுத்த தங்கம் தென்னரசு!