ETV Bharat / bharat

நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அனைத்து எம்.பிக்களுக்கும் கரோனா பரிசோதனை!

author img

By

Published : Aug 29, 2020, 11:49 AM IST

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன் எம்.பிக்கள் உள்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

all-mps-attending-monsoon-session-to-undergo-covid-19-test

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 18 அமர்வுகள் என வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதிவரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகஸ்ட் 27ஆம் தேதி நாடாளுமன்ற செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான உரிய வழிகாட்டுதல்களை மேற்கொள்ளவும், அதை அலுவலர்களும் உறுப்பினர்களும் முறையே பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர், கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக அனைத்து எம்பிக்கள், அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் முக்கிய ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.