கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இரவு, பகல் பாராது மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் போலங்கிர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குவதால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால், போலங்கிர் மாவட்டத்தில் உள்ள காலாஹந்தி, நுபடா, பர்கர்ஹ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்துள்ளார்.
மேலும், போலங்கிர் மாவட்டத்தில் பல பகுதிகளில் ரயில்வே போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.