உலகம் முழுவதும் வர்க்க பேதம் காலம்காலமாக தொன்றுதொட்டுவருகிறது. அதன் ஒருபகுதிதான் தங்களை பெரும்பான்மை என நினைப்போர் சொற்ப அளவில் உள்ளோரை சிறுபான்மையினர் எனக் கருதி அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். சிறுபான்மையினரை தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு என்ற கொடியவகை தீண்டாமை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. அதையொட்டியே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
இந்தி மொழி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிவருபவர் ஹாலித், இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். அவர் பணியாற்றும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்துவருகிறார். இந்நிலையில், இந்நிகழ்வுக்கு வந்திருந்த இந்து அமைப்பைச் சேர்ந்த அஜய் கௌதம், ஹாலித் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது முகத்தை பார்க்கப் பிடிக்காமல் கையை வைத்து கண்ணை மூடிக்கொண்டார்.
-
Ajay Gautam is a pandit. This is what pandits do. Only difference is earlier there were only Dalits facing this and now it's Muslims. https://t.co/fiV9acgyiA
— Aryan Srivastava (@aryan_sri971) August 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ajay Gautam is a pandit. This is what pandits do. Only difference is earlier there were only Dalits facing this and now it's Muslims. https://t.co/fiV9acgyiA
— Aryan Srivastava (@aryan_sri971) August 1, 2019Ajay Gautam is a pandit. This is what pandits do. Only difference is earlier there were only Dalits facing this and now it's Muslims. https://t.co/fiV9acgyiA
— Aryan Srivastava (@aryan_sri971) August 1, 2019
இவரது இந்தச் செயலுக்கு பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்துவருகின்றனர். சிலர் சமூக வலைதளங்களில், 'எத்தனை சமூக சீர்த்திருத்தவாதிகள் வந்தாலும் உங்களை திருத்தவே முடியாது' எனத் தெரிவித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இது போன்று சில நாட்களுக்கு முன்பு சொமாட்டோவின் வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். அந்த உணவை இஸ்லாமிய நபர் எடுத்து வந்த ஒரே காரணத்திற்காக உணவை வாங்காமல் நிராகரித்துவிட்டார். அது மட்டுமின்றி அந்நிகழ்வு குறித்து ட்வீட்டும் செய்திருந்தார்.
அதற்கு சொமாட்டோ நிறுவனம் உணவுக்கும் மதம் கிடையாது என பதிலடி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.