புதுச்சேரி அரசு நிறுவனமான பாசிக் நிறுவனத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இந்நிறுவனம் சார்பில் வேளாண் விளைபொருட்கள், உரங்கள் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக அங்கு ஆட்குறைப்பு செய்யப்பட்டது. இதில் தினக்கூலி ஊழியர்களாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கடந்த 60 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கடந்த ஒரு வருடமாக பலகட்ட போராட்டங்கள் நடத்திவந்தனர்.
ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் இதனை கண்டித்து ஏஐடியூசி பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் இன்று சட்டபேரவை நோக்கி ஊர்வலமாக கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.
அப்போது மிஷின் வீதி அருகே காவல்துறையினர் அவர்களை தடுப்புகளைக் கொண்டு தடுத்து நிறுத்தினர். இதனால் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மேலும் தடுப்புகளை மீறி சட்டப்பேரவை நோக்கி செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: