இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நான்கு பயணிகள் முறையான போர்டிங் பாஸ் வைத்திருந்தும் அவர்களுக்கு முறையான அறிவிப்பு தெரிவிக்காமல் விமானம் புறப்பட்டதால் பயணிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது என்றும், இதற்கு அபராதமாக மூன்று லட்சத்து 77 ஆயிரத்து 770 ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என தேசிய நுகர்வோர் நிவாரண ஆணையம் ( NCDRC) 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.
இது தொடர்பாக ஏர்லைன்ஸ் இண்டிகோ உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்பளித்த நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி அடங்கிய அமர்வு, “விமான நிலையத்தில் விமானம் புறப்படும் நேரத்திற்கு முன்னதாக சரியான நேரத்திற்கு பயணிகள் வராவிட்டால், பயணிகளுக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயம் விமான நிறுவனங்களுக்கு இல்லை.
குறைந்தபட்சம் 25 நிமிடத்திற்கு முன்னதாக வர வேண்டியது பயணிகளின் கடமையாகும். இந்த விவகாரத்தில இண்டிகோவின் தவறு ஏதுமில்லை. இது முழுக்க முழுக்க பயணிகளின் பொறுப்பு” என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: 'விமானம் தாமதமானால் இனி கவலையே வேண்டாம்: விரைவில் வருகிறது தியேட்டர்'