ETV Bharat / bharat

'9 கோடி தாங்க... விமானத்தை அள்ளி செல்லுங்க': ஓஎல்எக்ஸ் பதிவால் சர்ச்சை! - ஓஎல்எக்ஸ் பதிவு

லக்னோ: அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஐ.ஏ.எஃப் விமானம் 9 கோடி ரூபாய்க்கு ஓஎல்எக்ஸ் வலை தளத்தில் விற்பனைக்கு பதிவிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விமானம்
விமானம்
author img

By

Published : Aug 4, 2020, 5:28 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம், அலிகார் பகுதியில் முஸ்லீம் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு நிறுவப்பட்டுள்ள ஐ.ஏ.எஃப் விமானம் 9 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பிரபல வலை தளமான ஓஎல்எக்ஸில் பதிவிடப்பட்டுள்ளது‌. இந்த விமானமானது கடந்த 2009ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையின் (ஐஏஎஃப்) அடையாளமாக பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. ஆனால், இந்த விமானம் விற்பனை செய்யப்படுவதாக வெளியான விளம்பரம் போலியானது என பல்கலைக்கழகம் சார்பில் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நிலை கண்காணிப்பாளர் வாசிம் அலி, "ஓஎல்எக்ஸ் தளத்தில் எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விமானம் விற்பனை என்று பதிவு செய்திருப்பது போலியானது. அதை விற்பனை செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். இது முற்றிலும் பல்கலைக்கழகத்தை அவதூறு செய்வதற்கான முயற்சி" என சாடினார்.

இந்த விமான விற்பனை விளம்பரம் சமூக வலை தளங்களில் பரவத் தொடங்கியதும், ஓஎல்எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.