ETV Bharat / bharat

ஊரடங்கால் மட்டுமே டெல்லியின் மாசுபாட்டை குறைக்க வேண்டுமா? - பட்டாசு வெடிக்க தடை

டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரங்களில் மட்டுமே காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஊரடங்கு தளர்விற்குப் பின் அவை மீண்டும் அபாயக் கட்டத்தை நோக்கி நாளுக்கு நாள் பயணிப்பதாகவும் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Air pollution in Delhi-NCR: Lockdown gains made and lost

author img

By

Published : Dec 30, 2020, 6:20 PM IST

டெல்லி: கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. அந்த ஊரடங்கில் டெல்லியும், அதன் அண்டை மாநிலங்களும் கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாப்பு ஏற்படுத்தியதையும் மீறி காற்று மாசுபாடு கட்டுப்பாடு உள்ளிட்ட சில நன்மைகளைப் பெற்றன.

டெல்லி, அதன் அண்டை மாநிலங்களில் ஊரடங்கின் போது காற்று மாசு திருப்திகரமான நிலையிலேயே இருந்துவந்தது. ஆனால், கரோனா அச்சம் தணிந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முற்பட்டனர். இது டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை வெகுவாக பாதித்தது.

டெல்லியில் குளிர் காலம் நிலவுவதால் காற்று மாசுபாட்டின் தீவிரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனால் முதியவர்களும் குழந்தைகளும் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இவை தொற்று நோய்களைத் தீவிரப் படுத்தியதுடன், புதிய நோய்களுக்கும் வழிவகுத்தது.

டெல்லியில் காற்றை மாசுபடுத்தும் மிக முக்கிய காரணி லாரி போக்குவரத்து. இவை ஊரடங்கு காலங்களில் 97 விழுக்காடு குறைக்கப்பட்டதால், மாசுபாடு குறைந்தது. மே 18ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை, காற்று மாசு 'மிதமான' அளவிலேயே இருந்தது. ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை, மழைக்காலம் தொடங்கியதினாலும் மாசுபாட்டின் அளவு கட்டுக்குளேயே இருந்தது.

ஆனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதால் அக்டோபர் மாத இறுதிக்குள், காற்று மாசுபாடு மீண்டும் கடுமையாக மாறியது. இது கரோனா வைரஸ் நோயாளிகளுக்கும், வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் சுகாதார நிபுணர்களிடையேயும் கவலையை அதிகரித்தது.

இது முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் ஆகியோரின் தலைமையில் "யுத் பிரதுஷன் கே விருத்" ஒரு பெரிய காற்று மாசு எதிர்ப்பு பரப்புரையை தொடங்க டெல்லி அரசைத் தூண்டியுள்ளது.

நகரத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தேசிய தலைநகரில் பட்டாசுகளை வெடிக்க தடைசெய்தார்.

மேலும் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கும் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதற்கும் இடையிலான தொடர்புகளை கருத்தில் கொண்டு, அரசு நடத்தும் மருத்துவமனைகளில் முக்கியமான சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாக உறுதியளித்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் காற்றை மாசு படுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.