“மாட்ரிட், மிலன், கோபன்ஹேகன், வியன்னா உள்ளிட்ட நகரங்களுக்கான ஏர் இந்தியா விமானங்களின் பயணிகள் எண்ணிக்கை அதிகளவு இல்லாததாலும், செலவுக் குறைப்பு நடவடிக்கையாகவும் விமான சேவையை நிறுத்தியுள்ளது. மேலும் விமானத்தை இயக்குவதற்கு போதுமான நிதிகள் இல்லை என்பதால் விமானங்களை இயக்க இப்போது சாத்தியமில்லை.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா நிறுவனம், முன்னதாக ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட இடங்களுக்கு விமானங்களை இயக்கிவருகின்றது. மேலும், அந்த நாடுகள் வேண்டும்பொழுது மீண்டும் விமான சேவைகளைத் தொடங்குவோம்" என்று ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார்.
கடந்த மாதம், ஏர் இந்தியா வாரத்திற்கு மூன்று முறை ஒவ்வொரு புதன்கிழமை, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லியில் இருந்து பாரிஸுக்கும், வாரத்திற்கு நான்கு முறை ஒவ்வொரு திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் டெல்லியில் இருந்து பிராங்க்பர்ட்டுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டுவந்தன. கடந்த ஜூலை மாதம், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) உலகளவில் 2024 ஆம் ஆண்டு வரை பயணிகளின் போக்குவரத்து இயல்பு நிலைகளுக்குத் திரும்பாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.