காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 43 பயணிகள் விமானம் கொள்முதலுக்கு ஏர் இந்தியா - ஏர் பஸ் விமான நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில், ஆயிரம் கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகாரையடுத்து, இதனை விசாரிக்க அமலாக்கத்துறை களமிறங்கியது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், வரும் 23ஆம் தேதி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் கைது செய்யப்படுவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு வரும் 23ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.