இது குறித்து இந்திய செயல்பாட்டு விமானிகள் சங்கம் (ஐசிபிஏ) தரப்பில், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜீவ் பன்சலுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதில், ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடு, சேவை விதிகளை மீறியதற்காக 50 விமானிகளை சட்ட விரோதமாக நீக்கியுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து ட்விட் செய்துள்ள ஐசிபிஏ, "என்ன நடக்கிறது? முறையான நடைமுறை பின்பற்றப்படாமல் எங்கள் விமானிகளில் 50 பேர் ஒரே இரவில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கரோனா காலத்தில் முதற்களத்தில் போராடியர்களை நீக்கம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து விமானிகள் கூறுகையில், ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது குறித்து எந்த தகவலும் அறிவிக்கவில்லை என்றும், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி நீக்கம் நடைபெற்றுள்ளது எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் இது குறித்து தெரிவித்துள்ள ஐசிபிஏ, “இது போன்று விமானகளை நீக்குவதால் விமானங்களை இயக்கும் விமானிகளின் மனநிலை எப்படி இருக்கும். இதனால் விமான போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். மனிதாபிமான அடிப்படையில் இல்லாவிட்டாலும் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்தச் சூழ்நிலைக்கு விமானிகள் தள்ளப்படக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...சுயசார்புக்கு குரல் கொடுத்த மோடி!