ஏர் இந்தியா அலுவலக ஊழியருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருக்கும் ஏர் இந்தியா தலைமை அலுவலகம் இரண்டு நாள்களுக்குச் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாள்களில் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படவுள்ளன.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசின் 'வந்தே மாதரம் மிஷனில்' ஏர் இந்தியா விமான நிறுவனம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மே 7ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து 64 விமானங்கள் மூலம் 12 நாடுகளில் உள்ள 15 ஆயிரம் இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வரவுள்ளது.
இதனிடையே கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 780ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடியை வழங்கிய மத்திய அரசு!