ஹைதராபாத்தில் திஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கடந்த 6ஆம் தேதி காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களையும் மறு உடற்கூறாய்வுக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தடயவியல் வல்லுநர்கள் குழு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் இரண்டாவது பிரேத பரிசோதனையை காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று நடத்தியது.
முன்னதாக மறு உடற்கூறாய்வுக்காக காந்தி மருத்துவமனையில் ஒரு தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மறு உடற்கூறாய்வு காட்சிகள் முழுவதுமாக வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. மறு உடற்கூறாய்வுக்கு முன்னதாக எய்ம்ஸ் குழுவினர், சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தோடு பேச்சு வார்த்தை நடத்தினர். மறு உடற்கூறாய்வுக்கு பின்னர் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க : தெலங்கானா என்கவுன்டர்: ஆளுங்கட்சி பெண் எம்எல்ஏ பேச்சால் சலசலப்பு!