இந்தத் தளர்வானது தற்போதைய கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், வரும் கல்வியாண்டில் இந்த நடைமுறை பின்பற்றப்படாது என்றும் விளக்கியுள்ளது.
இதுகுறித்துப்பேசிய அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் உறுப்பினர் ராஜிவ் குமார், "இந்தியளவில் நடைபெறும் CAT, XAT, CMAT, ATMA, MAT, GMAT மற்றும் மாநிலங்களில் நடைபெறும் பொதுவான நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே எம்பிஏ, பிஜிடிஎம் (நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ) ஆகியப் படிப்புகளில் சேரமுடியும்.
பெரும்பான்மையான மாநிலங்களில் இந்த நுழைவுத்தேர்வுகள் கோவிட்-19 தொற்று அச்சத்தால் நடத்தப்படவில்லை. இந்தத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? ரத்து செய்யப்படுமா என்பது குறித்து எந்த அறிகுறியும் இல்லை. எம்பிஏ, பிஜிடிஎம் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு எழுதித் தகுதி பெற்றவர்கள் இளங்கலைப் படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு சேர்க்கையில் முக்கியத்துவம் தரவேண்டும்.
அதுபோக, இடங்கள் காலியாக இருந்தால், நுழைவுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் இளங்கலைப் பிரிவில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை வழங்கவேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்தக் கல்வியாண்டிற்கு மட்டுமே பொருந்தும். அடுத்துவரும் கல்வியாண்டில் இந்த நடைமுறை தொடராது" என்றார்.
இதையும் படிங்க: இந்தி தெரியாத அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பீர்களா? - குமாரசாமி கேள்வி