புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கலைக் கண்டித்து மின்துறை ஊழியர்கள், அலுவலர்கள் நடத்திவரும் போராட்டத்தால் மழையால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.
இதனைக் கண்டித்தும், உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தைப் பூட்டி போராட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய அன்பழகன், மக்களின் அத்தியாவசிய சேவையான மின்துறையில் வேலைநிறுத்தம் செய்வது சட்டத்திற்குட்பட்டது அல்ல. ஒருபுறம் மின்துறை ஊழியர்களை ஆளும் அரசே தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தவறான ஒன்று.
வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களை அரசு உடனடியாக அழைத்துப் பேச வேண்டும். அல்லது மக்களின் பாதிப்பை போக்க மாற்று ஏற்பாட்டை அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: கோயில் காளை உயிரிழப்பு - ஆட்டம் பாட்டத்துடன் இறுதி அஞ்சலி