கரோனா வைரசை (தீநுண்மி) அதிகம் பேருக்குப் பரப்பும் சாத்தியக்கூறுகள் ஒரு நபருக்கு இருக்குமேயானால், அவர்கள் சூப்பர் ஸ்பிரெடர் என வரையறுக்கப்படுகின்றனர். வெளிநாடு சென்றுவந்தவர்கள், வீட்டில் விழா நடத்தியவர்கள், காய்கறி விற்பனை செய்தவர்கள், பால்காரர், மளிகைக் கடைகாரர்கள் இந்த வளையத்தில் முக்கியமாகக் கண்காணிக்கப்படுபவர்கள்.
கரோனா அலையில் அகமதாபாத்
அகமதாபாத்தின் ஜமல்பூரில் உள்ள காய்கறி மொத்த விற்பனை சந்தையும், கலுபூரில் உள்ள பலசரக்கு மொத்த விற்பனை சந்தையும் வழக்கம்போல் இயங்கின. இவை கரோனா பரவலுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றன.
இது குறித்து கூடுதல் தலைமைச் செயலர் ராஜீவ் குப்தா, ”33 ஆயிரத்து 500 பேரில் சூப்பர் ஸ்பிரெடர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட 12 ஆயிரத்து 500 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதில் 700 பேருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
தற்போது, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மே 7 வரை முழு அடைப்பில் இருந்த கடைகள், கடந்த 15ஆம் தேதிதான் பொதுமக்கள் தேவைக்காகத் திறக்கப்பட்டன.
குறிப்பாக, இனிவரும் நாள்களில் மக்கள் ‘சுகாதாரத் திரையிடல் அட்டைகளை’ வைத்திருக்கும் விற்பனையாளர்களிடம் மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும். சூப்பர் ஸ்பிரெடர்கள் தங்களுடைய சுகாதாரத் திரையிடல் அடையாள அட்டைகளை 14 நாள்களுக்குப் பிறகு புதுப்பித்துக் கொள்ளலாம். மளிகை, காய்கறிக்கடைகள் காலை 8 மணிமுதல் 3 மணிவரை இயங்கும்” என்றார்.
இதையும் படிங்க: N-95, அறுவை சிகிச்சை முகக் கவசங்களைத் தவிர மற்ற முகக் கவசங்களை ஏற்றுமதி செய்யலாம்- மத்திய அரசு