ETV Bharat / bharat

'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்' - விவசாயிகள் கோரிக்கை - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன்

புதுச்சேரி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று, புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

pud
author img

By

Published : Jun 6, 2019, 7:22 AM IST

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநில கவுன்சில் சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் தேசிய கவுன்சில் உறுப்பினர் பழனி தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் பாலசுந்தரம், லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கருத்தரங்கம்

கருத்தரங்கில் 'இத்திட்டம் நிலங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பேரழிவை ஏற்படுத்தும். இதனை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். மக்களிடம் கருத்துக்கேட்பு ஒப்புதலின்றி எவ்வித வேலையும் தொடங்க மாநில அரசு அனுமதிக்கக்கூடாது. புதுச்சேரியின் பாரம்பரிய சின்னங்களான அரிக்கமேடு, காரைக்கால் அருகே உள்ள பூம்புகார் உள்ளிட்ட தொன்மை சின்னங்கள் அழிந்துவிடும் அபாயம் உள்ளதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி, தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு கைவிட வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Intro:ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது

Body:புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் அகழாய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநில கவுன்சில் சார்பில் கருத்தரங்கம் புதுச்சேரி தமிழ் சங்க அரங்கில் இன்று நடைபெற்றது தேசிய கவுன்சில் உறுப்பினர் பழனி தலைமை தாங்கினார் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் வரவேற்றார் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத் துணைத் தலைவர் பாலசுந்தரம் ,லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்

புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் சுற்றுச்சூழல் கடல்வளம் விவசாய நிலங்களை கடுமையாக பாதிக்கப்படும் ஹைட்ரோகார்பன் ஆய்வு திட்ட ஒதுக்கீடு மத்திய அரசு வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அளித்திருப்பதை கைவிட வேண்டும்

திட்ட செயல்பாடு பார்வைக் குறிப்புகள் மறைக்கப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது அனைத்து விபரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வேதாந்தா நிறுவனம் தெரிவிக்க வேண்டும்

பல வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட வழிமுறையான இத்திட்டம் நிலங்களுக்கும் சுற்று சூழலுக்கும் நிலத்தடி நீருக்கும் பேரழிவை ஏற்படுத்தும் எனவே இந்த அகல் ஆய்வு முறை இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் மக்களிடம் கருத்துக் கேட்பு ஒப்புதலின்றி எவ்வித வேலையும் துவங்க மாநில அரசுகள் தடை செய்திட வேண்டும் புதுச்சேரியின் பாரம்பரிய சின்னங்களான அரிக்கமேடு மற்றும் காரைக்கால் அருகே உள்ள பூம்புகார் உள்ளிட்ட தொன்மை சின்னங்கள் அழிந்துவிடும் அபாயம் உள்ளதால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் மத்திய அரசு கைவிட வேண்டும்

இத்திட்டத்தால் கோடிக்கணக்கான மக்கள் கட்டாய இடப்பெயர்வுக்கு உள்ளவர்கள் புதுச்சேரி மக்கள் வேறு வழியின்றி வேறு மாநிலத்திற்கு இடம்பெயரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன

பேட்டி :சோ. பாலசுப்பிரமணியன் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் புதுச்சேரி

Conclusion:ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று புதுச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.