ETV Bharat / bharat

400 கி.மீ பயணம்...கரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த ஆண் குழந்தை! - Arunachal Pradesh news

ஷில்லாங்: உடல்நலக் குறைபாட்டுக்கு சிகிச்சை பெற 400 கி.மீ பயணித்து மேகாலயாவுக்கு அழைத்து வரப்பட்ட எட்டு மாதக் குழந்தை கரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

baby
baby
author img

By

Published : Jul 7, 2020, 8:22 PM IST

Updated : Jul 7, 2020, 9:00 PM IST

அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு மாத ஆண் குழந்தை உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்ட நிலையில், மேகாலயாவில் உள்ள இந்திரா காந்தி சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் மண்டல மையத்தில் சிகிச்சைக்கு செல்லுமாறு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் குழந்தையை காரில் ஷில்லாங் அழைத்து வந்தனர். நேற்று (ஜூலை 7) குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்த நிலையில், உடனடியாக குழந்தைக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே குழந்தைக்கு கரோனா தொற்று உறுதியாகக் கூடாது என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பரிசோதனையில் குழந்தைக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், குழந்தையின் உடல் நலம் தேறிவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அன்று மாலையே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை மேகாலயா சுகாதாரத் துறை அமைச்சர் ஏ.எல். ஹேக் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார்.

புதிர்?

குழந்தையின் பெற்றோர் மற்றும் வாகன ஓட்டுநருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என தகவல்கள் மூலம் அறியமுடிகிறது. குழந்தையை மிகப் பாதுகாப்பாக பெற்றோர் வைத்திருந்தபடியால் சமூகப்பரவல் இல்லை எனக் கொண்டாலும், குழந்தைக்கு எங்கிருந்து தொற்று வந்தது என சந்தேகம் மேலிடுகிறது.

மேகாலயாவில் கரோனாவால் ஏற்பட்ட இரண்டாவது உயிரிழப்பு இந்த குழந்தை எனவும், முதல் உயிரிழப்பு ஏப்ரல் 15 ஆம் தேதியில் நேரிட்டது எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு தற்போது வரை 89 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 44 பேருக்கு கரோனா சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இதில் எல்லை பாதுகாப்பு படை தலைமையகத்தில்( பி.எஸ்.எஃப்) 22 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 43 பேர் கரோனாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர், இரண்டு பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனை மேற்கொள்ள வரிசையில் நின்ற பெண்ணுக்கு பிரசவம்!

Last Updated : Jul 7, 2020, 9:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.