ETV Bharat / bharat

மருத்துவர்களின் நாடு தழுவிய அடையாளப் போராட்டம் கைவிடப்பட்டது! - COVID 19

டெல்லி : நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து நாளை நடைபெறவிருந்த அடையாளப் போராட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் கைவிட்டதாக அறிவித்துள்ளது.

After Amit Shah's assurance, IMA drops protest plan
மருத்துவர்களின் நாடு தழுவிய அடையாளப் போராட்டம் கைவிடப்பட்டது!
author img

By

Published : Apr 22, 2020, 4:17 PM IST

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவிட்-19 தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சில மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீதான வன்முறைக்கு எதிராக ‘கருப்பு தினத்தை’ கடைபிடித்து அடையாளப் போராட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் முன்னெடுக்க இருந்தனர்.

இந்நிலையில், இந்திய மருத்துவச் சங்கத்தின் (ஐ.எம்.ஏ) பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காணொலி வாயிலாக டெல்லியில் இன்று கலந்தாய்வு நடத்தினார். இதில் அமித் ஷா பேசியபோது, நெருக்கடியான இந்த நேரத்தில் மருத்துவர்கள் அடையாள எதிர்ப்பு செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததால், அச்சங்கம் இந்த முடிவை அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது.

இந்தக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ் வர்தன், சுகாதாரச் செயலாளர் ப்ரீத்தி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மருத்துவர்கள் தாக்கப்படுவதும், அவர்கள் குடியிருப்புகளுக்குள் நுழைய அக்கம்பக்கத்தினர் அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகிவிட்டது.

After Amit Shah's assurance, IMA drops protest plan
மருத்துவர்களின் நாடு தழுவிய அடையாளப் போராட்டம் கைவிடப்பட்டது!

மேகாலயா தலைநகர் ஷில்லாங், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை ஆகிய இரு பகுதிகளில் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உயிரிழந்த இரண்டு மருத்துவர்களின் குடும்பங்கள், அவர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்யவும், அவர்களின் உடல்களைப் புதைக்கவும் உள்ளூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : உலக பூமி தினம்: கரோனாவை எதிர்க்கும் போராளிகளுக்கு பிரதமர் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.