புதுச்சேரியில் நுாற்றாண்டு பழமைவாய்ந்த ஏ.எஃப்.டி. பஞ்சாலை இயங்கிவருகிறது. இந்தப் பஞ்சாலை 'தானே' புயல் தாக்கத்தின் பாதிப்பு காரணமாக இயக்கப்படவில்லை. மேலும், ஊழியர்கள் ஊதியப் பிரச்னை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாகவும் முழுமையாக செயல்படவில்லை.
இந்த நிலையில், ஆலையில் உள்ள ஏ யூனிட் ஸ்பின்னிங் பிரிவில் வைக்கப்பட்டிருந்த பழைய பொருட்கள் நேற்று (மே 7) மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. ஆலை ஊழியர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களை வைத்து தீயை போராடி அணைத்தனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.