மத்திய அரசு அமலுக்கு கொண்டுவந்த தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்து வலுபெற்று வரும் நிலையில், அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களுக்கு முன்கூட்டிய வரியின் மூன்றாவது தவணையை செலுத்த டிசம்பர் 31ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக டிசம்பர் 15ஆம் தேதி காலக்கெடுவாக விதிக்கப்பட்டிருந்தது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் இணைய சேவையில் பெருமளவில் இடையூறு ஏற்பட்டதை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
CAA Protest: 'குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது' - உச்ச நீதிமன்றத்தில் மனு.
எனவே, துணைப்பிரிவு (2) இன் பிரிவு (ஏ) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 119 இன், 2019-20 நிதியாண்டிற்கான முன்கூட்டியே வரி செலுத்துவதற்கான டிசம்பர் தவணையின் கடைசி தேதியை 2019 டிசம்பர் 15ஆம் தேதியிலிருந்து 2019 டிசம்பர் 31ஆம் தேதிக்கு காலக்கெடுவை நீட்டிக்க மத்திய நேரடி வரிகள் வாரியம் முடிவு செய்துள்ளது.
மீண்டும் உயிர் பெறுமா உப்பளத்தொழில்?
மேற்கூறிய அனைத்தும் மாநிலங்களில் உள்ள மதிப்பீட்டாளர்கள், பெரு நிறுவனங்கள் என அனைவருக்கும் பொருந்தும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அதன் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. நேரடி வரி விதிப்பின் கீழ், முன்கூட்டியே வரி செலுத்துதல் என்பது ஒரு நிதியாண்டில் நான்கு முறை அரசுக்கு செலுத்தப்படுகிறது. அதன் காலக்கெடுவும், வரி செலுத்தப்படும் அளவுகளும் கீழவருமாறு.
ஆன்ட்டிபயாட்டிக் உள்ளிட்ட 12 வகையான மருந்துகளின் விலை 50 சதவிகிதமாக உயர்வு!
- ஜூன் 15 (முன்கூட்டியே வரியின் 15 சதவிகிதம்)
- செப்டம்பர் 15 (முன்கூட்டியே வரி செலுத்தப்பட்டதில் 45 சதவிகிதம்)
- டிசம்பர் 15 (முன்கூட்டியே வரி செலுத்தப்பட்டதில் 75 சதவிகிதம்)
- மார்ச் 15 (முன்கூட்டியே செலுத்தப்பட்ட வரியின் 100 சதவிகிதம்)
என்று கணக்கிடப்படுகிறது.