டெல்லி: நடிகை விஜயசாந்தி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அவர் ஞாயிற்றுக்கிழமை அமித் ஷாவை சந்தித்து பேசினார். முன்னதாக ஹைதரபாத் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், நடிகை விஜயசாந்தி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது அவருடன் பாஜக முக்கியத் தலைவர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் கருத்துக்கு பாபா ராம்தேவ் ஆதரவு!