பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை பாயல் கோஷ். இவர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் ரிபப்ளிக்கன் கட்சியில் பாயல் கோஷ் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக பாயல் கோஷ் இன்று (அக்.26) அக்கட்சியில் இணைந்தார்.
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே முன் கட்சியில் இணைந்த பாயல் கோஷுக்கு மகளிர் அணியின் துணைத் தலைவர் பதவி கொடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. பாயலுடன் சேர்ந்து அவரது வழக்குரைஞரும் கட்சியில் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க: கழுத்தில் பாம்பு- மாஸாக வெளியான சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!