ETV Bharat / bharat

'பொருளாதார சரிவுகளைச் சரிசெய்திடலாம்; ஆனால் உயிரிழப்புகளை...!'

டெல்லி: 'கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக நாடு முழுவதையும் முடக்கினால் பொருளாதார சரிவு ஏற்படும். அதனைச் சரிசெய்து விடலாம்; ஆனால் உயிரிழப்புகளை ஈடு செய்ய முடியாது' என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

P Chidambaram  corona virus  corona virus in india  corona virus update  கரோனா வைரஸ் பரவல்  கரோனா பாதிப்பு தமிழ்நாடு  கரோனா பாதிப்பு கேரளா
ப சிதம்பரம்
author img

By

Published : Mar 23, 2020, 2:25 PM IST

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம், கரோனா பரவலைத் தடுக்கும்விதமாக உடனடியாகவும், தைரியமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், அந்தப் பதிவில், "ஒரு வாரத்திற்கு மேலாக நாடு முழுவதையும் முடக்கி கரோனா பரவலைக் கட்டுப்படுத்துங்கள் என்று கெஞ்சினேன். யாரும் எனது வார்த்தையைக் கேட்டதுபோல் தெரியவில்லை. சில நேரங்களில் எனது கருத்து கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டது" எனவும் தெரிவித்திருந்தார்.

கரோனாவால் பொருளாதாரச் சரிவு ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டிய சிதம்பரம், பொருளதார இழப்புகளை நாம் சரிசெய்துவிட முடியும்; ஆனால், உயிரிழப்புகளை ஈடு செய்ய இயலாது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரை கோவிட்- 19 தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உள்ளது. இன்று மட்டும் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை ஏழு பேர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: நாட்டில் கரோனா பாதிப்பு 415ஆக உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.