தெலங்கானா தலைநகர் ஹைதாரபாத்திலுள்ள காப்பீடு மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநர் தேவிகா ராணி, மருந்தாளர் நாக லட்சுமி ஆகிய இரண்டு பேரிடமும் இருந்து 2.29 கோடி ரூபாயை ஊழல் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவினர் வெளியிட்டுள்ள அறித்கையில், "காப்பீட்டு மருத்துவ சேவைகளின் முன்னாள் இயக்குநர் தேவிகா ராணியின் கணக்கில் இருந்த கணக்கில் வராத 1,29,30,000 ரூபாய் தொகையும், அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் இருந்த கணக்கில் வராத 65,00,000 ரூபாய் தொகையும் காசோலைகள் மற்றும் பல்வேறு ஆன்லைன் பணப்பறிமாற்றங்கள் மூலம் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல் நாக லட்சுமி என்ற மருந்தாளர் கணக்கில் இருந்து 35,00,000 ரூபாய் தொகையும் அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தெலங்கானாவிலுள்ள சைபராபாத் பகுதியில் வணிக, குடியிருப்புப் பகுதிகளை வாங்க இந்தப் பணம் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் இந்த கணக்கிடப்படாத பணத்தைக் கொண்டு ஆறு குடியிருப்புகள், சுமார் 15,000 சதுரஅடி வணிக இடம் ஆகியவற்றை தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் வாங்க முயற்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து தலைவர் 3 மாதங்களுக்கு இடைநீக்கம்!