முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான ஏபிஜே அப்துல்கலாமின் 88ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவருடைய மறைவுக்குப் பிறகு, அப்துல்கலாமின் பிறந்தநாளை "உலக மாணவர்கள் தினம்" என்று அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளை மாணவர்கள் வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர். பள்ளி மாணவர்கள் 25 ஆயிரம் சதுர அடியில் தேசிய கொடியை பிடித்துக் கொண்டு பேரணியாகச் சென்றனர். அதுமட்டுமல்லாது அவரது புகைப்படம் பதித்த மாஸ்க்கை கையில் வைத்துக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.
இதையும் படிங்க: ’கலாம் நினைவிடத்தில் அறிவியல் மையம் விரைவில் அமைக்க வேண்டும்’ - குடும்பத்தினர் கோரிக்கை