புதுச்சேரி அடுத்த நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஆறுமுகம். இவர் திடீரென்று மாயமானார். இது குறித்து நெட்டப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பணத்திற்காக ஆறுமுகத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை காவல் துறையினர், தீவிரமாக விசாரணை நடத்தி ஆறுமுகத்தை மீட்டனர். அப்போது சக்திவேல், கார்த்திக், ரஞ்சித், பார்த்திபன், சிவா ஆகியோர் ஆறுமுகத்தை கடத்தி பணம் பறித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கும்பலை காவல் துறையினர் கைதுசெய்து, ரூ.3.80 லட்சம் பணத்தை பறிமுதல்செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் மணிகண்டன் என்பவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.