நாடாளுமன்றத்தின் காந்தி சிலையருகில் ஆம் ஆத்மி மக்களவை உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக கோஷமிட்டனர்.
இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளரிடம் பேசுகையில், “தேசிய தலைநகரில் கலவரத்தை உருவாக்கிய மக்களுடன் நாங்கள் நிற்கிறோம் என்ற செய்தியை மத்திய அரசு அளித்துவருகிறது.
ஆதலால் கலவரம் குறித்து விவாதிக்க அரசாங்கம் மறுக்கிறது. அவர்களும் (பாஜக) மறுக்கிறார்கள். இந்த விஷயத்தில் நீதி விசாரணை தேவை. கலவரம் போன்ற கடுமையான பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடியாவிட்டால் நாடாளுமன்றத்தின் முக்கியத்துவம் என்ன.?
தீவிரமான விஷயங்களுக்கு விடை கொடுக்க மத்திய அரசு தயாராக இல்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியில் தொடர தார்மீக அதிகாரம் இல்லை. அவரது கண்காணிப்பில், குற்றவாளிகள் பகல் நேரத்தில் தோட்டாக்களை வீசுகிறார்கள்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வளாகங்களில் தாக்கப்பட்டுள்ளனர். வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அவர் செல்லவில்லை. கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்தித்தாரா? என்றார்.
இதையும் படிங்க: 'கமல் வரலாம்; ரஜினிதான் முதலமைச்சர்' - அர்ஜூன் சம்பத்