ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் - ஜம்மு காஷ்மீர்

கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி, நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிட்டு மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த வரலாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு நாளையோடு ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. இதையடுத்து, அரசு நிர்வாகம் நில வங்கி, குடியேற்றச் சட்டம் போன்ற மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர்
author img

By

Published : Aug 4, 2020, 10:23 PM IST

ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் 'வரலாற்று முடிவின்' முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பாஜக ஒரு பெரிய கொண்டாட்டத்திற்கு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இதற்கு நேர்மாறாக, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் 'குழப்பம் மற்றும் அச்சத்தின்' ஒரு கட்டத்தை கடந்து செல்கிறார்கள் என்று பல வல்லுநர்கள் கூறுகிறார்கள்

ஜம்மு-கஷ்மீரின் அனைத்து பகுதி உள்ளூர்வாசிகளிடமும், ஜம்மு-கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அதன் மாநில அந்தஸ்தை ரத்து செய்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்த நாளிலிருந்து அனைத்து முன்னேற்றங்களையும் உன்னிப்பாகப் கவனித்து வரும் நிபுணர்களிடமும் ஈடிவி பாரத் பேசியது.

முதலீட்டாளர்களை கவரும் நில வங்கி

கடந்த ஆண்டு நவம்பர் முதல் பாதியில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் யூனியன் பிரதேசத்தில் தொழில்துறை பிரிவுகளை அமைப்பதற்காக முதலீட்டாளர்களை கவரும் வகையில் நில வங்கிகளை உருவாக்கத் தொடங்கியது. மத்திய அரசின் ஆகஸ்ட் 5 முடிவிற்கு நான்கு மாதங்களுக்குப் பிறகு வந்த இந்த நடவடிக்கை வதந்தி அலைகளை உருவாக்கி, மற்றொரு 'பெரிய வளர்ச்சி' விரைவில் நடக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவித்தன . ஜம்மு கஷ்மீர் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு-2020 வரவிருக்கும் நிலையில் இது மேற்கொள்ளப்பட்டதாக நிர்வாகம் தெளிவுபடுத்தியது.

ஜம்மு கஷ்மீர் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு - 2020க்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன, அங்கு வரும் முதலீட்டாளர்களை கவரும் வகையில் இரு பிராந்தியங்களிலும் (ஜம்மு-கஷ்மீர்) 5,000க்கும் மேற்பட்ட மனைகளை (தோராயமாக 624 ஏக்கர்) நில வங்கிகளை உருவாக்க உள்ளோம். எங்களிடம் உள்ள தொழிற்சாலை அமைக்க பயன்படுத்தக்கூடிய நிலங்களை அடையாளம் கண்டு வருகிறோம்”என்று ஜம்மு கஷ்மீர் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ரவீந்தர் குமார் தெரிவித்தார்.

மார்ச் மாதம் தலைநகரான ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் பங்கேற்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்

"இந்த உச்சிமாநாடு ஜம்மு-கஷ்மீரை ஒரு தொழில்துறை மையமாக மாற்றுவதற்கான ஒரு தீர்மானிக்கும் காரணியை நிரூபிக்கும்" என்று குமார் கூறினார், இது வணிக நட்பு கொள்கைகளை முன்வைக்க உதவுவது மட்டுமல்லாமல், ஜம்மு-கஷ்மீரின் வலிமை, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய உதவும் என்றும் கூறினார்.

இறுதியில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சிமாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது

"உச்சிமாநாட்டை தற்போது நடத்த இயலாது. கரோனா வைரஸ் நிலைமை சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரும் வரை இது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வணிகம் தொடர்பான சீர்திருத்தங்கள், தொழிற்பேட்டைகளை உருவாக்குதல், யூனியன் பிரதேசம் மற்றும் பிற மாவட்டங்களில் அதிகமான நிலங்களை அடையாளம் காண்பது போன்றவற்றிற்கு . நிர்வாகம் இந்த சமயத்தை பயன்படுத்தும்" என்று நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது

குடியேற்ற சட்டம்

ஜம்மு காஷ்மீர்

இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, ஜம்மு-கஷ்மீர் மறுசீரமைப்பு (மாநில சட்டங்களின் தழுவல்) ஆணை, 2020 மூலம் மத்திய அரசு யூனியன் பிரதேசத்தில் குடியேறுவதற்கான புதிய வரையறையை அறிமுகப்படுத்தியது. புதிய சட்டம், அனைத்து இந்திய குடிமக்களும், அவர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் ஜம்மு காஷ்மீரில் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. முந்தைய மாநிலமான ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் இருந்து 29 சட்டங்களை அரசு ரத்து செய்ததுடன், கடந்த ஆகஸ்டில் நிறுத்தப்படாத 109 சட்டங்களை திருத்தியது.

இந்த நடவடிக்கை பள்ளத்தாக்கின் முக்கிய அரசியல் கட்சிகளால் 'பாரபட்சமானது' மற்றும் 'அவமதிப்பு' என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு வரை, அரசியலமைப்பு விதி 370 மற்றும் 35 A பிரிவுகளின் கீழ் ஜம்மு கஷ்மீர் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றது. இது இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த எவருக்கும் அங்கு குடியேற்ற அந்தஸ்தைப் பெற அனுமதிக்கவில்லை. இதன் பொருள் வெளி நபர்கள் உள்ளூர் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கவோ அல்லது அங்கு சொத்துக்கள் வாங்கவோ முடியாது. இருப்பினும், இந்த விதி மத்திய அரசு பணிகளுக்கு பொருந்தாது.

புதிய விதி ஜம்மு-கஷ்மீர் பூர்வீக மக்களுக்கு அரசு அலுவலர் அல்லாத க்ரூப் 4 வேலைகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. உள்ளூர் விண்ணப்பதாரராக தகுதி பெறுவதற்கு ஒருவர் பூர்த்தி செய்ய வேண்டிய சில நிபந்தனைகளையும் இது பட்டியலிடுகிறது. விண்ணப்பதாரர்கள் ஜம்மு கஷ்மீரில் 15 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும், அல்லது மாநிலத்தில் ஏழு ஆண்டுகள் படித்து 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளாக பணியாற்றிய மத்திய அரசு அதிகாரிகளின் குழந்தைகள் (ராணுவம், துணை ராணுவப் படைகள், IAS, IPS), மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், மத்திய பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் ஊழியர்களும், அலுவலர் மற்றும் அலுவலர் அல்லாத அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள்.. இதில் மாநிலத்திற்கு வெளியே வேலை செய்பவர்களும் அடங்குவர்.

நிவாரண மற்றும் புனர்வாழ்வு ஆணையாளரால் பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர் மேற்கூறிய தேவைகளை பூர்த்தி செய்ய தேவையில்லை, மேலும் தானாகவே ஒரு குடியுரிமை சான்றிதழ் பெற தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.

அரசின் குடியேற்ற முடிவு பள்ளத்தாக்கின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு உடன்பாடில்லை என்பது விமர்சனங்கள் மூலம் தெளிவாகத் தெரிந்தது. காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் மாநாடு கட்சி, மக்கள் இயக்கம் மற்றும் புதிதாக துவங்கப்பட்ட அப்னி கட்சி ஆகியவை இந்த நடவடிக்கைக்கு எதிராக அதிருப்தியைக் காட்டின.

இதற்கிடையில், ஜம்மு-கஷ்மீரில் ஒரு மூத்த அதிகாரி யூனியன் பிரதேசத்தில் குடியேற்ற உரிமைகள் வழங்கப்பட்ட முதல் அதிகாரியாக ஆனார். தற்போது வேளாண் உற்பத்தித் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜம்மு கஷ்மீர் கேடர் அதிகாரியான நவீன் குமார் சவுத்ரிக்கு ஜம்முவிலிருந்து குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த சவுத்ரி, கடந்த 26 ஆண்டுகளாக ஜம்மு கஷ்மீர் அரசில் பணியாற்றி வருவதாக கூறினார். அவரது முதல் பதவி ஸ்ரீநகரின் உதவி ஆணையராக பணியாற்றியது.

"தற்போது காந்தி நகர் ஜம்மு என்ற முகவரியில் வசிக்கும் ஸ்ரீ தியோகாந்த் சவுத்ரியின் மகன் ஸ்ரீ நவீன் கே சவுத்ரி, ஜம்மு & கஷ்மீர் யூனியன் பிரதேச குடியுரிமை பெற்றவர் என்று சான்றளிக்கப்படுகிறது" என்ற ஜம்முவின் பாஹு பகுதியின் வட்டாட்சியர் வழங்கிய சான்றிதழ் கூறுகிறது

'ஆயுதப் படைகளுக்கான திட்டமிட்ட பகுதிகள்'

இந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதி, ஜம்மு-கஷ்மீர் நிர்வாகம், ஆயுதப் படையை கட்டமைக்க வசதியாக யூனியன் பிரதேசத்திற்குள் உள்ள சில இடங்களை 'வரையறுக்கப்பட்ட பகுதிகள்' என்று அறிவிக்க முடிவு செய்தது. அடுத்த உத்தரவுவில் உள்துறை அமைச்சகத்திடமிருந்து 'ஆட்சேபனை இல்லை’ சான்றிதழ் பெறுவதற்கான நிபந்தனையை நீக்கியது, பாதுகாப்புப் படையினர், சண்டை ஏற்படும் பிராந்தியத்தில் எங்கு வேண்டுமானாலும் அசையாச் சொத்தை கையகப்படுத்த முடியும்.

இந்த நடவடிக்கைக்கு லெப்டினன்ட் கவர்னர் ஜி.சி.முர்மு தலைமையில் உள்ள ஜம்மு-கஷ்மீர் நிர்வாக கவுன்சில் ஒப்புதல் அளித்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட நடவடிக்கைகளில் கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிறப்பு அனுமதியை வழங்குவதற்காக 1988ஆம் ஆண்டு கட்டட நடவடிக்கைக் கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் ஜம்மு கஷ்மீர் மேம்பாட்டுச் சட்டம் 1970ஐத் திருத்துவதற்கான முன்மொழிவுக்கு நிர்வாக சபை ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஆயுதப் படைகளின் தேவைக்கேற்ப சில பகுதிகளை “வரையறுக்கப்பட்ட பகுதிகள்” என்று அறிவிக்க வழிவகுக்கும் என்றும், அத்தகைய பகுதிகளில், கட்டுமான நடவடிக்கைகளை சிறப்பு அனுமதி மூலம் மேற்கொள்வது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "சில இடங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அவற்றின் பாதுகாப்புத் தேவைகளை அபிவிருத்தி நோக்கங்களுக்காக சமரசம் செய்து கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது," என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

இருப்பினும், முக்கிய அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை விமர்சித்தன. ஜம்மு-கஷ்மீரை இராணுவ இடமாக மாற்றுவதையும், பொதுமக்கள் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தேசிய மாநாடு கட்சி குற்றம் சாட்டியது.

"ஜம்மு-கஷ்மீரில் முன்யோசனையின்றி, இதுபோன்ற முன்மொழியப்பட்ட அறிவிக்கப்பட்ட பகுதிகளில், ஆயுதப்படைகளின் தேவைகளுக்கு கட்டுமானம் என்ற பெயரில், பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் அதிகமான நிலங்களை அளிக்கிறோம்" என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் இம்ரான் தார் கூறினார்.

"முன்மொழியப்பட்ட திருத்தம், விவசாய நடவடிக்கைகள் போக மீதமுள்ள விளைநிலங்கள் மற்றும் வளமான நிலப்பரப்புகளை அளிப்பதன் மூலம் இராணுவத்தின் வசம் உள்ள நிலத்துடன் சேர்க்கப்படும். ஜம்மு-கஷ்மீரின் முக்கியத்துவம் என்பது சில பகுதிகளுடன் கட்டுப்பட்டதல்ல. முழு பிராந்தியமும் முக்கியத்துவம் வாய்ந்தது. " என்று மேலும் கூறினார்

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதை விட இந்த முடிவு 'பயங்கரமானது' என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் நயீம் அக்தர் கூறினார். "கல்லறைகளுக்கு கூட எங்களுக்கு போதுமான நிலம் இருக்காது என்று தெரிகிறது. இதன் பொருள் ஜம்மு-கஷ்மீரில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் அரசின் அடிப்படை செயல்பாடுகளை கூட தீர்மானிப்பதில் அதிகாரம் இல்லை, அக்தர் கூறினார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜம்மு-கஷ்மீர் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், தற்போதுள்ள எந்தவொரு சட்டத்தையும் மீறி இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்பதால் விமர்சனங்கள் ஆதாரமற்றவை என்று கூறினார்.

"இந்த முடிவு வெறுமனே ஆயுதப்படைகளின் தற்போதைய நிலத்திற்குள் அறிவிக்கப்பட்ட 'வரையறுக்கப்பட்ட பகுதிகள்' என்று அழைக்கப்படுபவற்றில், முக்கிய திட்டத்தின் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி, கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்வதற்கான பொறுப்பு மற்றும் அனைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்புகளும் கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க. ஆயுதப்படைகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்றுசெய்தித் தொடர்பாளர் ஜூலை 19 அன்று கூறினார்.

விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

"எந்தவொரு நிலத்தையும் ஆயுதப்படைகளுக்கு மாற்றுவதற்கும் இந்த முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை," என்று அவர் மேலும் கூறினார், "இடமாற்றம், கையகப்படுத்தல் அல்லது கோரிக்கை ஆகிய இரண்டுமே, இந்த விஷயத்தில் தற்போதுள்ள சட்டம் மற்றும் விதிமுறைகளால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகின்றன. எந்தவொரு புதிய நிலத்தையும் மாற்றுவது, கண்டோன்மென்ட்கள் அல்லது இராணுவ நிலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளை வரையறுப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்படவில்லை. அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பிற்கான கோரிக்கைகளை பூர்த்தி செய்ய ஆயுதப்படைக்கான நிலத்தின் தேவையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒத்திசைத்தல் ஆகியவை அரசின் கொள்கையாகும்"

வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

உள்ளூர்வாசிகள் பதிவு அல்லது கேமராவில் பேசுவதற்கு சங்கடப்பட்டாலும், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிர்வாகம் எடுத்த முக்கியமான முடிவுகள் குறித்து அவர்கள் அனைவரும் குழப்பமடைந்ததாகத் தோன்றியது. இதற்கிடையில், ஜம்மு-கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை ஒட்டுமொத்த வல்லுநர்களும் ஆராய்ந்தபோது, இந்த முடிவுகளை "ஒருதலைப்பட்சமான மற்றும் சந்தர்ப்பவாதம்" என்றே கூறுகின்றனர்

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான ரியாஸ் மஸ்ரூரைப் பொறுத்தவரை, அரசு எடுத்த முடிவுகள் ஒருதலைப்பட்சமானது என்றும் ஜனநாயகம் அல்ல என்றும் கூறுகிறார்

"ஒரு ஜனநாயக அமைப்பில், சட்டங்கள் இயற்றப்படும், திருத்தப்படும். மேலும் சட்டங்கள் செயல்படுத்தப்படும்போது, ​​அதை குடிமக்கள் பின்பற்ற வேண்டும் அல்லது இல்லையெனில் அவர்கள் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் கஷ்மீரில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மக்கள் புகார் கூறுகின்றனர். ஜம்மு-கஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்று எதுவுமில்லை, நிர்வாகக் குழுவின் கீழ் இரண்டு மூன்று அதிகாரிகளுக்கு நிர்வாகப் பணி ஒதுக்கப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவாலாகும். அதனால்தான் இது போன்ற முடிவுகளுக்கு எதிர்ப்பை காண்கிறோம்., "என்று மஸ்ரூர் கூறுகிறார்

"இந்த முடிவுகள் அனைத்தும் சரியான நடைமுறைகள் மூலம் எடுக்கப்பட்டிருந்தால், மக்களிடையே இத்தகைய கோபமும் மனக்கசப்பும் இருந்திருக்காது என்று நான் நம்புகிறேன். பிராந்திய அரசியல் அமைப்பு இங்கே இருந்திருந்தால், இதை அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் அவர்களின் கருத்தைத் தெரிவித்து, அவை வேறுவிதமாக இருந்திருக்க கூடும். இன்று நாம் காணும் மாற்றங்கள் ஒருதலைப்பட்சமானவை, ஜனநாயக அமைப்பிற்கு ஒரு சவால்" என்று அவர் மேலும் கூறினார்.

சமீபத்தில், ஜனநாயகத்தில் எதிர்ப்பின் குரலை அடக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நிர்வாகத்தின் வாதங்கள் அவர்களின் பார்வையில் சரியாக இருக்கலாம், ஆனால் மக்கள் பங்கேற்பு இல்லாமல் ஜனநாயக அமைப்பு முழுமையடையாது, என்ற ராஜஸ்தான் அரசியல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்தை மேற்கோள் காட்டினார்

கடந்த ஒரு வருட காலமாக பள்ளத்தாக்கின் பிரதான அரசியல்வாதிகள் எவ்வாறு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் மஸ்ரூர் விரிவாகப் பேசினார்.

"கஷ்மீரில் இந்தியக் கொடியை அசைத்த அரசியல்வாதிகள் தேர்தல்களில் பங்கேற்றனர், மக்களும் அவர்களுக்கு வாக்களித்தனர். அவர்கள் இப்போது சுமார் ஒரு வருடமாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, ​​கஷ்மீரில் எந்த அரசியலும் இல்லை. இது ஒரு ஜனநாயக அமைப்பு அல்ல," கூறினார்.

இதேபோன்ற கருத்துக்களை எதிரொலிக்கும் மற்றொரு பத்திரிகையாளர் ஃபிர்தௌஸ் இல்லாஹி, 'இந்த முடிவுகள் கஷ்மீரிகளின் குரலைக் ஒடுக்குவதற்கு எடுக்கப்படுகின்றன' என்று நம்புகிறார்.

"370 மற்றும் 35 A பிரிவுகளை ரத்து செய்வது உட்பட அனைத்து முடிவுகளும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் தடைசெய்யப்பட்டபோது எடுக்கப்பட்டது. இது தவறு. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது சரியான வழியைப் பின்பற்றி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், " என்று இல்லாஹி கூறினார் மேலும், "இங்குள்ள குரல்கள் ஒடுக்கப்பட்டு வருவதாக நான் உணர்கிறேன், மக்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள், யாரும் பேசக்கூட தயாராக இல்லை."

"எல்லோரும் தங்கள் வீடுகளில் முடங்கி இருக்கும்போது முடிவுகள் மக்கள் மீது திணிக்கப்படுகின்றன. பிரச்னைகளில் எந்தவொரு எதிர்ப்பும் இருக்காது என்பதை அவர்கள் அறிவார்கள். தொற்றுநோய் காரணமாக மக்கள் இறக்கும் இந்த சமயத்தில் எந்த முடிவும் எடுப்பது நியாயமானது அல்ல என்று நான் நினைக்கிறேன். இது பாசிசம். " என்று அவர் மேலும் கூறினார்.

நிர்வாகத்தின் முடிவுகளை சட்டவிரோதமானது என்று கூறி, "அவர்கள் ஜம்மு-கஷ்மீரில் மக்கள்தொகை மாற்றத்தை செய்ய முயற்சிக்கின்றனர். கிராமப்புறங்களில், மக்கள் குடியேற்ற சான்றிதழ்களைப் பெற நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்த சான்றிதழ்கள் இப்போது வேலைகள், உயர் படிப்பு போன்றவற்றுக்கு அவசியமானவை, ஆனால் அதே நேரத்தில், ஜம்முவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நீங்கள் காணலாம். லடாக் உட்பட பிராந்தியத்தின் எல்லா இடங்களிலிருந்தும் குடியேற்றக் கொள்கைக்கு எதிரான குரல்கள் ஒலிக்கின்றன. "

மற்றொரு மூத்த பத்திரிகையாளர் ஹயா ஜாவேத், "370 மற்றும் 35A ரத்து செய்யப்பட்டது இந்தியாவிற்கும் ஜம்மு கஷ்மீருக்கும் இடையிலான உறவில் விரிசல்களை உருவாக்கியுள்ளது" என்று கருதுகிறார்.

இந்தியாவை நம்பியவர்கள் மற்றும் நாடு தங்களுடன் நிற்கிறது என்று நம்பிக்கை கொண்டவர்கள் பிரிவுகளை ரத்து செய்த பின்னர் அனைத்து நம்பிக்கையையும் இழந்துவிட்டனர். சிலர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர், ஆனால் ஜம்மு-கஷ்மீரில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் முடிவெடுக்கப்பட்டதற்கு பிறகு கோபமாகவும் விரக்தியுடனும் உள்ளனர் என்று ஜாவேத் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "ஜம்மு-கஷ்மீர் மக்களை அந்நியப்படுத்த இதுபோன்ற முடிவுகளை அவசரமாக எடுத்துக்கொள்வதன் மூலம் பாஜக அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்துகிறது. கடந்த ஒரு வருடமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர், 370 மற்றும் 35 ஏ பிரிவை ரத்து செய்யும் போது பாஜக கூறியதற்கு நேர் எதிரானது. அவர்கள் வெறுப்பின் விதைகளை விதைக்கிறார்கள். "

குடியேற்றச் சட்டத்தை பற்றி கூறும்போது, "அவர்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து மக்களை யூனியன் பிரதேசத்திற்கு அழைக்கத் தொடங்கியுள்ளார்களே, ஜம்மு-காஷ்மீரின் அனைத்து வேலையற்ற அனைத்து இளைஞர்களுக்கும் வேலைகளை வழங்கி விட்டனரா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: சட்டப்பிரிவு 370 நீக்கம்: காஷ்மீரின் வளர்ச்சிக்கான கதவுகளை திறந்துள்ளதா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.