2020 மே மாதம் மத்தியில் உலக வர்த்தக மையத்தின் தலைமை இயக்குநர் ராபர்ட் அஸ்வெடோ (பிரேசில்) தான் ஆகஸ்ட் 2020 இப்பொறுப்பில் இருந்து விலகவிருப்பதாக அறிவித்தார். புதிய தலைமை இயக்குநரை தேர்ந்தெடுப்பது சர்வதேச உறவுகளில் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் இது சவால்மிக்கதாகவும், நல்வாய்ப்பாகவும் இருக்கப்போகிறது.
ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே உலக வர்த்தக மையம் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் முடிவை எடுக்கும். இதற்கான பணிகளை தற்போதைய தலைமை இயக்குநர்தான் மேற்கொள்வார். உலக வர்த்தக மையத்தின் கீழ் செயல்படும் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் இதில் பங்கேற்பர். 40 பிரதிநிதிகள் வரை பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது, இதனால் சிக்கல்களை தீர்க்க வழிவகுக்கும். இந்த அதிகாரப்பூர்வமற்ற விவாத முறையில், வணிக அமைச்சகர்கள் பிரதிநிதிகளுக்கு தலைமை வகிப்பார். உலக வர்த்தக மையத்தின் அரசியல் சார்ந்த வணிக பிரச்னைகள் குறித்து இதில் விவாதிக்கப்படும். சில நாடுகள் எழுப்பும் தொழில்நுட்ப கோளாறுகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவதற்கு தலைமை இயக்குநர் அழைக்கப்படுவார். இந்த கூட்டத்தின் முக்கிய கோட்பாடு என்னவென்றால், ‘அனைத்தும் ஒப்புக்கொள்ளாதவரை எதுவும் ஒப்புக்கொள்ளப்படாது’ என்பதாகும். இதற்கு ‘க்ரீன் ரூம்’ முறை என பெயர்.
தோஹா மேம்பாட்டு வர்த்தக வட்ட மேஜை மாநாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், க்ரீன் ரூம் முறையின் முடிவுகள் உலக வர்த்தக மைய அமைச்சகம் அளித்துள்ள ஒப்புதல்படி அறிவிக்கப்படும். 1994ஆம் உருகுவே மாநாட்டில் உலக வர்த்தக மையத்தின் ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டாலும், 1996ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் உலக வர்த்தக மைய அமைச்சகத்தின் மாநாட்டில் புதிய சிக்கல்களான முதலீடு மற்றும் போட்டி தொடர்பான திட்டம் ஒத்திவைக்கப்பட்டது போல் இது ஒத்திவைக்கப்படும்.
2003 ஜனவரி, உலக வர்த்தக மையத்தின் தலைமைக் குழு பின்பற்றிய அதே வழிமுறையை பின்பற்றி 8 ஜூன் முதல் 8 ஜூலை (2020) வரை தங்கள் உறுப்பினர்களிடம் தலைமை இயக்குநருக்கான வேட்புமனுக்களை பெற்றது. கென்யா, நைஜீரியா, தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேர் ஜூலை 9ஆம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். எகிப்து, மெக்சிகோ, மோல்டோவா, சவுதி அரேபியா மற்றும் பிரிட்டன் ஆகியவையும் வேட்பாளர்களை கொண்டுள்ளது.
2020 ஜூலை 15 - 17 இடையில், உலக வர்த்தக மையத்தின் தலைமைக் குழு இந்த எட்டு வேட்பாளர்களிடமும் அடுத்த தலைமை இயக்குநராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பான உரையாடலை நிகழ்த்தி, ஒருமித்த கருத்தை எதிர்பார்க்கும். உலக வர்த்தக மைய செயலாளரின் தலைமையில் பலதரப்பட்ட சீரமைப்புகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்தியா சார்பாக இதில் யாரும் போட்டியிடவில்லை. தற்போதைய சர்வதேச சூழலில், அடுத்த தலைமை இயக்குநருக்கான ஒருமித்த முடிவு, அம்மையத்திடமிருந்து அதன் உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் முடிவே ஆகும். அது உலக வர்த்தக மையத்துடன் அதிகப்படியான வணிக தொடர்பை வைத்திருக்கும் தேசங்களின் குறுகிய தேசிய நலன்கள் சார்ந்தும் இருக்கிறது.
உலக வர்த்தக மையத்தின் 164 உறுப்பினர்களுக்கு சர்வதேச வணிகத்தில் 98% பங்களிப்பு உள்ளது அதை சார்ந்து இணக்கமாக இருப்பதற்கான தேவையை உணர்த்துகிறது. உலக வர்த்தக மையம் தனது உறுப்பினர்களை அதன் இரண்டு முக்கியமான கோட்பாடுகளை பின்பற்றச் சொல்கிறது. அவை மிகவும் பிடித்த தேசத்துக்கான முறை மற்றும் தேசத்துக்கான முறை ஆகும். இதன்மூலம் தங்கள் வணிக கூட்டாளிகளிடமும், தங்கள் சந்தைகளிலும் அது பாகுபாடு காட்டாது. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுக்கு இது உந்துதலாக இருக்கும்.
உலக வர்த்தக மையத்தின் அடுத்த தலைமை இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய வணிக நாடுகளின் ஒருமித்த கருத்தில் இரு சிக்கல்கள் ஆதிக்கம் செலுத்தும். ஒன்று தோஹா வட்ட மேஜை வர்த்தக மாநாடு பேச்சுவார்த்தைகள் கடந்த 10 ஆண்டுகளாக தடைபட்டிருப்பது. இந்த பேச்சுவார்த்தைகளில் விவசாயத்தை சந்தைப்படுத்துதல் அடங்கும், இதில் இந்தியா முக்கியமான பங்கு வகிக்கிறது.
மற்றொன்று உலக வர்த்தக மையத்தின் தகராறுகளை முடித்துவைப்பதற்கான தகராறு தீர்வு முறையை (dispute settlement mechanism) தலைமை இயக்குநர் எப்படி கையாள்கிறார் என்பதில் உள்ளது. 1995ஆம் ஆண்டு முதல் 500-க்கும் மேற்பட்ட சர்வதேச வணிக தகராறுகள், தகராறு தீர்வு முறையின் மூலம் முடித்துவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பொருளாதார சக்திகளிடம் ஏற்படும் தகராறுகளை முடித்துக்கொள்ள இந்தியா இம்முறையை அதிகமாக பயன்படுத்தி வருகிறது.
அமெரிக்கா இந்த தகராறு தீர்வு முறையை ஏற்காமல் உலக வர்த்தக மையத்தின் ஒப்பந்தத்தை மீறி சுய முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. எனவே புதிதாக வரும் தலைமை இயக்குநர் முன்பு இந்த முறையை மீட்டெடுக்கும் பணி சவாலாக உள்ளது. அதேபோல் ஐரோப்பிய ஒன்றியமும் இம்முறையில் இடைக்கால ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இடைக்கால ஏற்பாடுகளை ஏற்று இந்தியாவின் முக்கிய வணிக கூட்டாளிகளான சீனா, தென் கொரியா, பிரேசில், நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் அதோடு இணைந்துள்ளன.
1995ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் பொருளாதார சீரமைப்புப் பணிகளுக்கு உலக சுகாதார மையம் வசதி அமைத்துக் கொடுத்துவருகிறது. குறிப்பாக பொருளாதார சேவை, டெலிகாம் மற்றும் வணிக சேவை ஆகியவற்றில் அதன் பங்களிப்பு முக்கியமானது. 2024ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா அடைவதற்கு இத்துறைகள் வழிவகுக்கும். உலக வங்கியின் கூற்றுப்படி 2018ஆம் ஆண்டு இந்தியாவின் சர்வதேச வணிகம் அதன் ஜிடிபியில் 40% ஆகும்.
இக்காரணங்களால் உலக வர்த்தக மையத்தின் அடுத்த தலைமை இயக்குநரை தேர்ந்தெடுக்கும் பணியில் இந்திய தீவிரமாக செயல்பட வேண்டியது அவசியம். இதன்மூலம்தான் இந்தியா பலதரப்பட்ட சீரமைப்புகளை கட்டியெழுப்ப முடியும்.