ETV Bharat / bharat

தனியார் மதுபான கடையை அடித்து நொறுக்கிய 6 பேர் கொண்ட கும்பல்! - தனியார் மதுபான கடை

புதுச்சேரி: காரைக்கால் அருகே தனியார் மதுபான கடையில் புகுந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கடையை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

pondicherry
author img

By

Published : Oct 22, 2019, 3:42 PM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கீழவாஞ்சூரில் பகுதியில் அமைந்துள்ள லட்சுமி மதுபானக்கடையை ஆஜேஷ் ராம், மாதேஷ் ராம், சிவகாளிமுத்து ஆகிய மூன்றுபேரும் நடத்திவருகின்றனர்.

இந்த மதுபானக்கடை புதுச்சேரி-நாகப்பட்டினம் எல்லையில் அமைந்திருப்பதால் தினமும் இங்கு அதிகளவில் வாடிக்கையார்கள் வருகைதருவர். நேற்றிரவு வழக்கம்போல் கடை செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது முகத்தில் கைக்குட்டை கட்டிக்கொண்டு அங்குவந்த ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென கடையை அடித்து நொறுக்கினர்.

லட்சுமி மதுபானக்கடை

அடித்து நொறுக்கியதோடு கடையின் மேலாளரான கணபதி என்பவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். உடனே இது குறித்து கணபதி திருப்பட்டினம் காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், கடையின் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். இச்சம்பவத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: புதுச்சேரி இடைத்தேர்தலில் 69.44% வாக்குகள் பதிவு

Intro:காரைக்கால் கீழவாஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மதுபான கடையில் மர்ம நபர்கள் புகுந்து சூறையாடியதால் பரபரப்பு. திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.Body:காரைக்கால், கீழவாஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மதுபான கடையில் மர்ம நபர்கள் புகுந்து சூறையாடியதால் பரபரப்பு. திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால், கீழவாஞ்சூரில் ஆஜேஷ்
ராம், மாதேஷ் ராம் மற்றும் சிவகாளிமுத்து ஆகியோருக்கு சொந்தமான தனியார் மதுபான கடை இயங்கி வருகிறது. நாகை, காரைக்கால் மாவட்ட எல்லை பகுதியில் மதுபான விடுதி அமைந்துள்ளதால் எந்நேரமும் கூட்டம் இருந்து வரும். இந்நிலையில் நேற்றிரவு மதுபான
விடுதிக்குள் முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மதுபான விடுதியினை சூறையாடி கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுள்ளனர். மேலும் கடையை சூறையாடியதோடு மிரட்டல்
விடுத்தும் சென்றதால் மதுபான விடுதியின் மேலாளரான கணபதி என்பவர் அளித்த புகாரின் பேரில் திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபான கடையில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகள் யார் என போலீசார் விசாரணையை நடத்தி
வருகின்றனர். மர்ம நபர்கள் மதுபான கடையினை சூறையாடியதில் சுமார் ரூ.50ஆயிரம் மதிப்பு உள்ள மதுபானங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டம் அதிகம் உள்ள நேரத்தில் திடீரென புகுந்து மதுபான விடுதியினை மர்ம நபர்கள் சூறையாடிய சம்பவம்
காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.