ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வருபவர் ஷேக் மெஹபூப் சாஹேப் (73). இவரது மகன் ஷேக் ஸ்ஹிலார்.
கடந்த 8 ஆம் தேதியன்று ஷேக் ஸ்ஹிலார் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது தந்தை ஷேக் மெஹபூப் சாஹேப்பை பென்ஷன் பணத்தை தன்னிடம் தருவதில்லை எனக் கூறி அடித்து மிதித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த ஷேக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு நந்திகாமா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஷேக் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து மெஹபூப்பின் மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஷேக் ஸ்ஹிலாரை கைது செய்தனர். பணத்துக்காக குடிபோதையில் மகனே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அப்பகுதி மக்களை சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.