தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ்குமார் (35), சங்கீதா(28) தம்பதி கர்நாடக மாநிலம் உடுப்பி அருகேயுள்ள அம்பலபாதியில் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று கொல்லூரு மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று உடுப்பிக்கு பேருந்தில் வந்துள்ளனர். அப்போது பேருந்தின் உள்ளேயே நஞ்சு அருந்தியுள்ளனர். இதனையறிந்த சகப் பயணிகள் பேருந்தின் ஓட்டுநரிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து குடப்பூராவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொண்டுசேர்த்தனர். தற்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க...'என் மரணம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துவிடும்' -நிர்பயா குற்றவாளி உருக்கம்