மும்பையின் நேருலில் வசித்து வரும் ராணுவ வீரர் ராமு லக்ஷ்மன் சக்பால் (ஓய்வு பெற்றவர்) ஆபத்தான நிலையில், இந்திய கடற்படை மருத்துவமனை கப்பல் அஸ்வினியில் அனுமதிக்கப்பட்டார். சில வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று காரணமாக அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது.
கடற்படை மருத்துவமனையில் அவருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று (ஆகஸ்ட் 15) அவர் வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார். இந்திய ராணுவத்தின் மகார் ரெஜிமெண்டில் பணியாற்றிய வீரர் சக்பால், 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் ஏற்பட்ட காலத்திலிருந்து தற்போது 2020ஆம் ஆண்டில் கரோனா வைரஸ் தொற்றுநோய் வரை அனைத்தையும் பார்த்ததாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
முதன்மை கடற்படை சுகாதார மையமான ஐ.என்.எச்.எஸ் அஸ்வினியில் இருந்து அவரை அனுப்பி வைத்தனர். மேலும் ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள் போன்றவர்களுக்கு இந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.