சீக்கியர்களின் மதகுருவான குருநானக் தேவின் 550ஆவது பிறந்தநாளைக் கொண்டாட மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இம்முடிவைத் தொடர்ந்து, கலாசார உறவுகளுக்கான இந்திய கழகம் (ஐ.சி.சி.ஆர்), டெல்லியிலுள்ள வெளிநாட்டுத் தூதரகத் தலைவர்களை செவ்வாய்க்கிழமை அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு வர அழைப்பு விடுத்துள்ளது.
‘தலையை எடு... ஒரு கோடி தரேன்’ அதிரவைத்த சிவசேனா தலைவர்!
டெல்லியிலிருந்து 90க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் அமிர்தசரஸ் பயணம் செய்வார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐ.சி.சி.ஆர் பஞ்சாப், ஷிரோமணி குருத்துவாரா பர்பந்தக் குழு ஆகியவை இணைந்து இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.