ETV Bharat / bharat

நாட்டில் சராசரியாக நாளொன்றுக்கு 87 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு - பெண்கள் மீதான தாக்குதல்

நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 7.3 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

Crimes against women rise, 87 rapes reported daily in 2019: NCRB

author img

By

Published : Sep 30, 2020, 1:19 PM IST

டெல்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019ஆம் ஆண்டில் 7.3 விழுக்காடு அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் சராசரியாக தினமும் 87 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தியாவில் குற்றங்கள் - 2019" என்ற அறிக்கையில் 2018ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 3.78 லட்சமாக இருந்ததாகவும், இவை கடந்த வருடம் 7.3 விழுக்காடு அதிகரித்து 4.05 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளதும் தெரிகிறது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான வழக்குகள் (30.9%) கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. மேலும், பெண்கள் மீதான தாக்குதல் (21.84), பெண்களைக் கடத்தல் (' 17.9%), மற்றும் பாலியல் வன்புணர்வு (7.9%) போன்றவை அடுத்தடுத்த பிரிவுகளாக உள்ளன.

நாட்டில் உள்ள பெண்களின் மக்கள் தொகையைக் கணக்கிடும்போது, 2018ஆம் ஆண்டில் 58.8ஆக இருந்த குற்ற சம்பவங்களின் விகிதம், கடந்த 2019ஆம் ஆண்டில் 62.4ஆக அதிகரித்துள்ளது. மாநிலங்கள்வாரியான குற்ற வழக்குகளில் உத்தரப் பிரதேசம் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் முதன்மை மாநிலமாக உள்ளது.

குற்ற ஆவண காப்பகத்தின்படி, 2019ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 4 லட்சத்து, ஐந்தாயிரத்து 861ஆக பதிவாகியுள்ளன, இது 2018ஆம் ஆண்டில் 3 லட்சத்து 78 ஆயிரத்து, 236 ஆக இருந்தது. இதில், 59 ஆயிரத்து 583 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், ராஜஸ்தான் 41 ஆயிரத்து, 550 வழக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா 37 ஆயிரத்து, 144 வழக்குககளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் ஏழாயிரத்து 444 வழக்குகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் ஆறாயிரத்து 402 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் ஆறாயிரத்து 53 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

ராஜஸ்தானில் அதிக எண்ணிக்கையாக ஐந்தாயிரத்து 997 பாலியல் வன்புணர்வு குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் அவை மூன்றாயிரத்து 65 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் இரண்டாயிரத்து, 485ஆகவும் பதிவாகியுள்ளன.

இதையும் படிங்க: இந்தியாவில் நாள்தோறும் 80 கொலைகளும் 91 வன்புணர்வுகளும் நடந்தன - தேசிய குற்ற ஆவண காப்பகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.