ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தில் 77 பேர் கைது - சமூக வலைதளங்களில் வெறுப்பு பரப்புரை

லக்னோ: சமூக வலைதளங்கள் வாயிலாக மதநல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட 77 பேரை காவலர்கள் கைது செய்தனர்.

88 arrested in UP in two days since Ayodhya verdict: Police
author img

By

Published : Nov 11, 2019, 12:51 PM IST

அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இது மக்களின் உணர்வு ரீதியான விவகாரம் என்பதால், உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த இரு தினங்களில், சமூக வலைதளங்களில் வெறுப்பு பரப்புரையை முன்னெடுத்த 77 பேர் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை அம்மாநில காவல்துறை உயரலுவலர்கள் தெரிவித்தனர்.

சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்த அவர்கள் மதநல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் நடந்துக் கொண்டால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுத்தனர்.
கடந்த இரு தினங்களில் மட்டும் ஃபேஸ்புக், ட்விட்டர், யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 13 ஆயிரம் வெறுப்புணர்வு கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 56 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இந்து-இஸ்லாமிய தலைவர்களுடன் அஜித் தோவல் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.