கரோனா பாதிப்பு காலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சமய மாநாட்டை நடத்திய குற்றச்சாட்டில் டெல்லி தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலானா சாத் மீது டெல்லி காவல் துறை வழக்குப்பதிந்து, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இவர் மீது வழக்குப்பதிவு செய்து 75 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இவர் வெளியில் வரவில்லை. அத்துடன் இவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாகவும் காவல் துறை இதுவரை விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று சாகீர் நகரிலிருக்கும் தனது இல்லத்தை விட்டு மவுலானா சாத் வெளியே வந்துள்ளார். தனது வீட்டின் அருகே உள்ள மசூதியில் தொழுகை மேற்கொண்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இவர் வருகை தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மவுலானா சாத்துக்கு எதிராக காவல் துறை மட்டுமில்லாமல், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இறந்தவரின் உடலை குப்பை வண்டியில் எடுத்துச் சென்ற அவலம்!