ETV Bharat / bharat

புதுச்சேரி இடைத்தேர்தலில் 69.44% வாக்குகள் பதிவு!

author img

By

Published : Oct 21, 2019, 10:51 PM IST

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் 69.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அருண்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்த இடைத்தேர்தலில் 69.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அலுவால் ஆகியோர் காமராஜ் நகர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அருண், "காமராஜர் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏதும் ஏற்படவில்லை. கடந்த தேர்தலில் இதே தொகுதியில் 75 சதவிகித வாக்குகள் பதிவாகின. இம்முறை 69. 44 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்" என்றார்.

தொடர்ந்து, "வரும் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை மூன்று சுற்றுகளாக எண்ணப்படும். பகல் 12.30 மணியளவில் இடைத்தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்" என்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் கூறினார்.

இதையும் படிங்க: தலைநிமிரவைத்த தமிழ்நாட்டு வாக்காளர்கள்!

Intro:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் 69.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன 24 ஆம் தேதி 12.30மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

Body:புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு முடிவுற்றது மொத்தம் 69 புள்ளி 44 சதவீத வாக்குகள் பதிவாகின இதனை தொடர்ந்து அந்தந்த வாக்குச் சாவடியில பதிவான வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அலுவால் ஆகியோர் காமராஜ் நகர் பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அருண் கூறுகையில்

காமராஜர் நகர் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார் கடந்த தேர்தலில் இங்கு 75 சதவீத வாக்குகள் பதிவாகின இம்முறை 69. 44 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்றார் வாக்கு சதவீதம் குறைந்து கான காரணங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றார் வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ளது அன்று காலை 8 மணிக்கு துவங்கும் 11 டேபிள் களில் வாக்குகள் மூன்று சுற்றுகளாக எண்ணப்படும் என்றும் முதல் சுற்று முடிவுகள் காலை பத்து முப்பது மணிக்கு தெரியவரும் வரும் 24ஆம் தேதி மதியம் பன்னிரண்டு முப்பது மணிக்கு இடைத்தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்
தொடர்ந்து
முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பேசுகையில்

காமராஜர் நகர் தொகுதியில் வாக்களிக்க பணம் கொடுத்ததாக 12 கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

Conclusion:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் 69.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன 24 ஆம் தேதி 12.30மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.