உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் பல லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கரோனா பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என இந்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
மேலும் பெண்களை விட அதிக அளவு ஆண்கள் தான் கரோனா பாதிப்பில் இறந்துள்ளனர். பெண்களின் இறப்பு 36 சதவிகிதம் என்றும் ஆண்களின் இறப்பு 64 சதவிகிதம் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆராய்ச்சியில் வயது விகிதாசாரத்தைப் பொறுத்தவரை, 15 வயதுக்கு குறைவானவர்களில் 0.5 சதவிகிதம் இறப்புகளும், 15-30 வயதுக்குட்பட்டவர்களில் 2.5 சதவிகிதம், 30-45 வயதுக்குட்பட்டவர்களில் 11.4 சதவிகிதம், 45-60 வயதுக்குட்பட்டவர்களில் 35.1 சதவிகிதமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50.5 சதவிகிதமும் இறந்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
70 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் இறந்துள்ளதாகவும் சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: விசாகப்பட்டினத்தில் மீண்டும் ஒரு தொழிற்சாலையில் வெளியேறிய வெள்ளைப்புகை