ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் போலீஸ் ரோந்து வாகனம் மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு! - மங்கல்ஹாட் காவல் நிலையத்தின் ரோந்து வாகனம் விபத்து

ஹைதராபாத்: மங்கல்ஹாட் காவல் நிலையத்தின் ரோந்து வாகனம் மோதியதில் சாலையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த ஆறு வயது சிறுவன் உயிரிழந்தார்.

chld
hild
author img

By

Published : Oct 1, 2020, 5:39 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மங்கல்ஹாட் காவல் நிலையத்திற்கு சொந்தமான ரோந்து வாகனம் ஒன்று, சாலையில் இருந்த சிறுவன் மீது மோதியது.

இந்த விபத்தில் அச்சிறுவன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிடைத்த தகவலின்படி, அந்தக் காவல் நிலையத்தின் ரோந்து வாகனத்தை சிறப்பு காவல் அலுவலர் பகவந்த் ரெட்டி இயக்கியது தெரியவந்தது.

மதிய வேளையில் உணவு அளிக்க வந்த சிறுவன், பிளேட்டை கழுவி கொண்டிருக்கும் சமயத்தில் தான், போலீஸ் வாகனம் நேராக வந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை அறிந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் காவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304 ஏ (அலட்சியம் காரணமாக மரணத்தை ஏற்படுத்துகிறது) கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.