ETV Bharat / bharat

வளரும் குழந்தைகள் இருக்கும் வீடா? இந்தப் பொருள்களை கைக்கு எட்டாத இடத்தில் வைங்க! - வீட்டு உபயோக பொருள்கள்

குழந்தைகள் ஊர்ந்து செல்லத் தொடங்கும் சமயம்தான் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம். கண் சிமிட்டும் நேரத்தில் ஏதேனும் பொருள்களை தங்கள் வாயில் எடுத்து போட்டு விடுவார்கள். அந்த வகையில், குழந்தைகளிடமிருந்து நாம் பாதுகாத்து வைக்க வேண்டிய, இயற்கையாகவே நச்சுத்தன்மை கொண்ட சில பொருள்களின் பட்டியலைக் காண்போம்.

hinga
thinga
author img

By

Published : Sep 6, 2020, 4:41 PM IST

குழந்தைகள் ஊர்ந்து செல்லத் தொடங்கியதுமே, அருகில் இருக்கும் ஆள்களைவிட, பக்கத்தில் பார்க்கும் பொருள்களைப் பிடித்து விளையாடுவதில்தான் ஆர்வமாக இருப்பார்கள். அவற்றை ’இப்படியும் பயன்படுத்தலாம்’ என நமக்கு சொல்லித் தரும் அளவிற்கு எதையாவது அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள். நாமும் வீட்டில் உள்ள பொருள்கள் தானே‌ என்று அஜாக்கிரதையாக விட்டுவிடுவோம். ஆனால், அத்தகையப் பொருள்களில்தான் ஆபத்து மறைந்து உள்ளது என்பதை நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு சாதாரணமாக நாம் வீட்டில் பயன்படுத்தும் குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆறு பொருள்கள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்!

சிங்க் கிளீனர்:

சமையல் அறையின் சிங்க்கை சுத்தமாக வைத்துக்கொள்ள உபயோகிக்கும் கிளீனரில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளன. அவை உடலில் பட்டால் தோல், கண்களில் எரிச்சலுக்கு வழிவகுக்கும். பிற உடல்நலப் பிரச்னைகளையும் அது ஏற்படுத்தும். எனவே, குழந்தைகளிடமிருந்து அவற்றை விலக்கியே வைக்கவும். மேலும், நீங்கள் அதனைப் பயன்படுத்தும்போது, ​​அறையில் சரியான காற்றோட்டம் இருப்பதை உறுதிசெய்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டே உபயோகம் செய்யுங்கள்.

ரூம் பிரஷ்னர்:

ரூம் பிரஷ்னர் மூலமாக வெளியேறும் வாசனை திரவியம் பலருக்கு தலைவலியை ஏற்படுத்தும். இவை மூக்கு, தொண்டை, கண்களில் எரிச்சலை ஏற்படுத்தவல்லது. அதுமட்டுமின்றி ரூம் பிரஷ்னர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள். எனவே, மிகுந்த ஜாக்கிரதையாக அதனை உபயோகிக்க வேண்டும்.

பிளீச்சிங் பவுடர்:

பிளீச்சிங் பவுடரில் உள்ள ரசாயனமானது சோடியம் ஹைபோகுளோரைட் என அழைக்கப்படுகிறது. தவறுதலாக அதை சாப்பிட்டு விட்டால் பெரும் தீங்கு ஏற்படுத்திவிடும். வயிறு, உணவுக் குழாயை சேதப்படுத்தி விடும். இதை ஒருபோதும் மற்ற ரசாயனங்களுடன் கலந்துவிடக்கூடாது. குறிப்பாக அம்மோனியாவுடன் இணைத்துவிட்டால் பெரும் நச்சுப் புகையாக மாறிவடும்.

வாஷிங் பவுடர்:

துணிகளில் உள்ள கறைகளை நீக்கப் பயன்படுத்தப்படும் வாஷிங் பவுடரை, தவறுதலாக குழந்தைகள் உட்கொண்டால் அது பெரும் ஆபத்தை விளைவிக்கும். அதிக நச்சுத்தன்மை கொண்டது. எனவே, குழந்தைகள் கண்களில் வாஷிங் பவுடன் சிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நாப்தலின் பந்துகள்:

நாப்தலீன் பந்துகள் துணிகளை பூச்சிகள் தாக்குவதிலிருந்து தவிர்ப்பதற்காகவும், பல்லியை விரட்டவும் பயன்படுத்துகின்றனர். இவற்றை ஆடைகள் வைத்திருக்கும் அலாமாரியில் வைப்போம். ஆனால் இவை பார்ப்பதற்கு சாக்லேட் போன்று உள்ளதால், குழந்தைகள் எதுவும் யோசிக்காமல் உடனடியாக எடுத்து சாப்பிட அதிக வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகள் முன் இவற்றை உபயோகிப்பதையும் தவிருங்கள்.

மருந்து/மாத்திரைகள்:

உடலில் பிரச்னை இருக்கும் சமயத்தில் மருந்துகள் உட்கொண்டால் நல்லது தான். ஆனால், அதே சமயம், மருத்துவ பிரச்னைகள் இல்லாமல் குழந்தைகள் மருந்தை உட்கொண்டால் மாறுபட்ட விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பல மாத்திரைகள் மிட்டாய் வடிவத்தில் உள்ளதால், குழந்தைகளை அவை எளிதாகக் கவர்ந்துவிடுகின்றன. அவற்றை தேவையில்லாமலும், அதிக அளவிலும் உட்கொண்டால் ஆபத்து ஏற்படும்.

ஆகையால், இந்தக் கவர்ச்சியூட்டும் வீட்டுப் பொருள்கள் உங்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் ஆபத்தானது தான். இவற்றை உங்கள் குழந்தைகள் அணுகாமல் இருக்கும் வகையில் பத்திரமாக அலமாரியில் பூட்டி வையுங்கள். இது குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு, பொருள்களின் லேபிள்களில் அச்சிடப்பட்டிருக்கும். எனவே, எந்தப் பொருள்களையும் உபயோகிப்பதற்கு முன்பு லேபிள்களை படிப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.