அஸ்ஸாம் மாநிலத்தில் அதிபயங்கரமான உல்பா (ULFA) பயங்கரவாதிகள் செயல்பட்டுவருகின்றனர். இவர்கள் அஸ்ஸாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Assam) என்ற இயக்கத்தை முன்னெடுத்து இந்திய அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிவருகின்றனர்.
உல்பா பயங்கரவாதிகள் ஒப்படைத்த ஆயுதங்கள் இந்தப் பயங்கரவாத கூட்டத்தைச் சேர்ந்த ஆறு பேர் இன்று மனம் திருந்தி டினிசுனியா மாவட்டத்தில் இந்தியப் பாதுகாப்புப் படையினர், அஸ்ஸாம் காவலர்கள் முன்னிலையில் சரணடைந்தனர். அப்போது அவர்கள் அதிபயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகளை ஒப்படைத்தனர்.
நேற்று பாதுகாப்புப் படையினர் முன்னிலையில் இரண்டு உல்பா பயங்கரவாதிகள் சரணடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது. உல்பா பயங்கரவாத இயக்கத்தில் உள்ளவர்கள் மனம் திருந்தி, தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் எனத் தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அஸ்ஸாம் குழந்தைகள் திட்டத்துக்கு மத்திய அரசு பாராட்டு