புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்புத் தன்மை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டம் (EPF), ஊழியர்கள் காப்பீட்டு திட்டம் (ESI), தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) உள்ளிட்ட திட்டங்களில் புதிதாக இணைந்த ஊழியர்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலானாது 2017ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் முதல் 2019ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) தெரிவித்துள்ளது.
‘இந்திய ஊதிய அறிக்கை: வேலைவாய்ப்பு பார்வை - நவம்பர் 2019’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “3 கோடியே 3 லட்சத்து ஐந்தாயிரத்து 347 புதிய ஊழியர்கள், வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்துள்ளார்கள். 3 கோடியே 37 லட்சத்து 26 ஆயிரத்து 225 புதிய ஊழியர்கள், ஊழியர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளனர். மேலும், 16 லட்சத்து 72 ஆயிரத்து 813 பேர் தேசிய ஓய்வூதிய திட்டத்திலும் இணைந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த தகவல் அறிக்கை பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோடி ஆட்சிக்காலத்தில்தான் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பயனாளிக்கு தரவேண்டிய ரூ. 26.67 லட்சத்தை எல்.ஐ.சி உடனடியாகச் செலுத்த உத்தரவு!