ETV Bharat / bharat

5 டிரில்லியன் பொருளாதார கனவு கொண்ட நாடு சுகாதாரத்துறையை புறக்கணிக்கலாமா? - சுகாதாரத்துறை

இந்தியா 5 டிரில்லியன் டாலர்கள் மதிப்புக் கொண்ட பொருளாதார நிலையை எட்ட வேண்டுமென்றால் சுகாதாரத்திலும், ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

5 trillion economic dreamers ignore health sector
5 டிரில்லியன் பொருளாதார கனவுக் கொண்ட நாடு சுகாதாரத்துறையை புறக்கணிக்கலாமா?
author img

By

Published : Mar 10, 2020, 8:44 PM IST

இந்தியா 5 டிரில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட பொருளாதார நிலையை எட்ட வேண்டுமென்றால் சுகாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்பது நல்ல சுகாதாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும். 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்தியாவின் கனவான 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுமளவுக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் இந்தியாவில் சுகாதாரத்துறையில் நல்ல நிலையை எட்டினால் மட்டுமே 5 டிரில்லியன் பொருளதாரத்தை எட்ட முடியுமென்பதை கோடிட்டு காட்டியுள்ளது. ஆனாலும் சுகாதாரத் துறைக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 65,011 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-2020ஆம் ஆண்டில் ரூ. 62,659 கோடி சுகாதாரத் துறைக்கு நிதியாக ஒதுக்கப்பட்டிருந்தது. அதாவது நடப்பு பட்ஜெடில் வெறும் 4 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது அல்லது பெயரளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட தொகையில், தேசிய சுகாதாரத் திட்டத்துக்கு மட்டும் இதில் பாதித் தொகை சென்று விடும். நடப்பு நிதிநிலை அறிக்கையில் தேசிய சுகாதார திட்டத்துக்கு நிதி உயர்த்தி அளிக்கப்படவில்லை மீதி ரூ.33,400 கோடி உள்ளது. ஆயுஷ்மென் பாரத் அரசின் முக்கியமான சுகாதாரத் திட்டமாகும். பிரதமரின் சுகாதார காப்பீட்டு திட்டம் (health insurance scheme) சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை (HWC)உள்ளடக்கியது இந்தத் திட்டம்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வெற்றிப்பெறும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆனால் 2020-2021ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் திருத்தப்பட்ட மதிப்பீடுகள், திட்டத்துடன் தொடர்புடைய எந்தவொரு செயல்பாட்டுக்கும் உகந்ததாக இல்லை. பிரதமரின் சுகாதார காப்பீடு திட்டத்துக்கு 2020-2021 ஆம் ஆண்டு ரூ. 6,400 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதே அளவு தொகைதான் கடந்த ஆண்டும் ஒதுக்கப்பட்டது. ஆனாலும் 50 சதவிகித பணிகளே நடந்துள்ளன. உலகிலேயே மிகப் பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமான பிரதமரின் சுகாதார காப்பீடு திட்டத்தில் ஒரு பயணாளிக்கு ரூ.128 தான் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

5 trillion economic dreamers ignore health sector
5 டிரில்லியன் பொருளாதார கனவுக் கொண்ட நாடு சுகாதாரத்துறையை புறக்கணிக்கலாமா?

மறுபுறம், மத்திய அரசின் (சி.ஜி.ஹெச்.எஸ்), மற்றொரு காப்பீட்டு திட்டத்தில் ஒரு பயனாளிக்கு 8,700 ரூபாய் கிடைக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பிரதமரின் சுகாதார காப்பீட்டு திட்டத்தை புத்துயிர் பெற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இந்த நிதிநிலை அறிக்கையில், திறன் விரிவாக்கத்திற்காக தனியார் துறையின் முதலீட்டை ஈர்ப்பதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களுக்கு தனியார் முதலீடு கிடைக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மருத்து உபகரணங்களுக்கு சலுகைகள் அறிவிப்பதன் வழியாகவும் இந்த திட்டத்தை ஊக்கப்படுத்த இந்த நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கபட்ட பிரதரின் சுகாதார காப்பீட்ட, நல்வாழ்வு மையங்கள் அமைப்பது போன்ற திட்டங்களின் மீது குறைவான கவனமே செலுத்தப்படுகிறது. அடுத்த நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு ரூ. 1,350 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே அளவு தொகையே ஒதுக்கப்பட்டது. இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளதாரத்தை கொண்ட நாடு. அடுத்த ஐந்து ஆண்டுகளில், 5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி செல்வதை கனவாக இந்தியா கொண்டுள்ளது. அப்படியென்றால், இந்தியா உலக மனிதர தரக்குறியீட்டில் 130ஆவது இடத்தில் இருப்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா? ஆரோக்கியம் பொருளாதார வளச்சிக்கு வித்திடும் முக்கிய காரணி. ஆனால், ஆப்பிரிக்க சஹாரா பாலைவன நாடுகளில் ஒதுக்குவதைப் போல ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்துறைக்கு தொடர்ந்து குறைவான நிதியே ஒதுக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத் துறைக்கு மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஒதுக்கும் நிதி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளன. இதற்கு முன்னதாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 விழுக்காடே சுகாதாரத்துறைக்கு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த இருபது வருடங்களில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வரி விகிதம் பல மடங்கு உயர்ந்துள்ளன. பொருளாதாரமும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும், இதே காலக்கட்டத்தில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கியது இல்லை. சுகாதாரத்துக்கான செலவுகளை மாநில அரசுகள் செய்து வருகின்றன. மத்திய அரசு அதே அளவுக்கோ அல்லது அதற்கு மேலும் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டியது அவசியம் இருக்கிறது.

2017ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட புதிய சுகாதாரக் கொள்கையின்படி, 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகிதத்தை சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துக்கு ஒதுக்குவதை உறுதிபடுத்திக் கொண்டு அதற்கேற்ற வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும்.

இந்தியா 5 டிரில்லியன் பொருளதாரத்தை எட்டும் சமயத்தில் சுகாதாரத் துறையில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். பொருளாதார வளர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. நல்ல ஆரோக்கியமான சமூகத்தால் மட்டுமே நல்ல பொருளாதாரத்தை உருவாக்க முடியும். அதனால் கிடைக்கும் பலன்களை நாம் இன்னும் முழுமையாக அறிந்துகொள்ளவில்லை என்றோ அல்லது மதிப்பிடவில்லை என்றோதான் சொல்ல வேண்டும். நல்ல தகுதியான தொழிலாளர் திறனும் ஆரோக்கியமான மக்கள் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை சக்தியாக மாற்றும் வல்லமை கொண்டவர்கள்.

கட்டுரையாளர்: சக்திவேல் செல்வராஜ்,

இயக்குநர் ஆரோக்கியமான பொருளாதாரத்துறை நிதி கொள்கை பிரிவு.

இதையும் படிங்க : வங்கிக்கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.